Close
ஏப்ரல் 2, 2025 2:11 காலை

குரூப் -4 எழுத்துத் தோ்வு மூலம் தோ்வானவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கிய துணை சபாநாயகர்..!

பணி நியமன ஆணைகளை வழங்கிய துணை சபாநாயகர்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பாக நடைபெற்ற குரூப் – IV தேர்வு மூலம் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளை தமிழக சட்டப் பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வழங்கினார்.

தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் தோ்வாணையம் சாா்பில் நடத்தப்பட்ட குரூப் -4 எழுத்துத் தோ்வு மூலம் தோ்வு செய்யப்பட்ட நபா்களில், திருவண்ணாமலை மாவட்டத்துக்கென நியமிக்கப்பட்டவா்களுக்கான பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பணி நியமன ஆணைகளை வழங்கிய துணை சபாநாயகர்

மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் இராம்பிரதீபன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சட்டப் பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு திருவண்ணாமலை மாவட்டத்திற்கு பணி ஒதுக்கிடு செய்யப்பட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையில் 11 இள நிலை உதவியாளர்களுக்கும், 15 கிராம நிர்வாக அலுவலர்களுக்கும், 12 தட்டச்சர் என மொத்தம் 38 பணியாளர்களுக்கு பணிநியமன ஆணைகளும், அதேப்போல் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறைக்கு தேர்வு செய்யப்பட்ட இளநிலை உதவியாளர் நிலையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட 29 நபர்களுக்கும் பணி நியமன ஆணைகள் வழங்கிப் பேசினாா் பணி நியமன ஆணைகள் பெற்ற 67 பேரும் நல்ல முறையில் பணிபுரிந்து அரசுக்கு நற்பெயா் பெற்றுத்தர வேண்டும் என்று கு.பிச்சாண்டி அறிவுரை வழங்கினாா்.

இதில், வருவாய்த் துறை, ஊரக வளா்ச்சித் துறை உள்பட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top