சோழவந்தான் :
சோழவந்தான் பிஜேபி மண்டல் தலைவராக கதிர்வேல் பொறுப்பேற்பு மாவட்ட தலைவர் ராஜசிம்மன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் சோழவந்தான் மண்டல் தலைவராக இரண்டாவது முறையாக திருவேடகம் கதிர்வேல் பொறுப்பேற்றார். மாவட்ட தலைவர் ராஜசிம்மன் தலைமை வகித்து பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். மேற்கு மாவட்ட தலைவர் சிவலிங்கம் முன்னிலை வகித்தார்.
மூத்த நிர்வாகி பெருமாள் ஜி வரவேற்றார். இதில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் சோழவந்தான் மண்டல் நிர்வாகிகள் முன்னாள் நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர், நண்பர்கள் உறவினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.