திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள 14 செவிலியர் பணியிடங்களுக்கு வருகிற 3-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட சுகாதார அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்
திருவண்ணாமலை மாவட்டத்தில் தேசிய நலவாழ்வு குழும திட்டத்தின் கீழ் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு தகுதி வாய்ந்தவர்கள் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் மூலமாக பணிபுரிய விண்ணப்பிக்கலாம்.
காலியிடங்களின் எண்ணிக்கை: 14
கல்வித் தகுதி: இந்திய நர்சிங் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் நர்சிங் கல்லூரிகளில் இருந்து Diploma in GNM/B.Sc., (Nursing) படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு 50 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ. 18,000
தகுதி
இந்திய நர்சிங் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் நர்சிங் கல்லூரிகளில் இருந்து GNM/B.Sc. (நர்சிங்) டிப்ளமோ.
விண்ணப்பத்துடன் அனுப்ப வேண்டிய ஆவணங்கள்:
1. கல்வித் தகுதி சான்று.
2. மதிப்பெண் சான்று.
நிபந்தனைகள்:
1. இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது.
2. எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது.
விண்ணப்பிக்கும் முறை:
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://tiruvannamalai.nic.in/notice_category/recruitment/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: கௌரவச் செயலாளர்/ மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட நலவாழ்வுச் சங்கம், மாவட்ட சுகாதார அலுவலகம், பழைய அரசு மருத்துவமனை வளாகம், செங்கம் சாலை, திருவண்ணாமலை – 606601
விண்ணப்பிக்க கடைசி தேதி: 03.04.2024