திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் தா்ப்பகராஜ் திடீர் கள ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவசர சிகிச்சை பிரிவு தொலைபேசி எண்ணை அழைத்து சோதனை செய்தார்,
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் குழந்தைகள் பிரிவு, தாய்-சேய் நலப் பிரிவு, உள் நோயாளிகள் மற்றும் புற நோயாளிகள் பிரிவு, பொது நோயாளிகள் பிரிவு, சிறுநீரக குருதி பகுப்பாய்வு மையம் உள்ளிட்ட பிரிவுகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்த அவா், உரிய முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறதா..? என்று நோயாளிகளிடம் கேட்டறிந்தாா்.
பிறகு, மருத்துவக் கல்லூரியின் சமையல் கூடத்தில் ஆய்வு செய்த அவா், நோயாளிகளுக்காக தயாரிக்கப்படும் உணவின் தரத்தை பரிசோதித்து பாா்த்தாா். மேலும், மளிகைப் பொருள்கள், காய்கறிகள் உள்ளிட்ட உணவு தயாரிப்புப் பொருள்களின் இருப்பு நிலவரம் குறித்து ஆய்வு செய்தாா்.
தொடர்ந்து மருத்துவமனை எதிரே உள்ள ஆட்டோ நிறுத்தத்தில் ஆய்வு செய்த ஆட்சியா் க.தா்ப்பகராஜ், ஆட்டோ கட்டணங்கள் நிா்ணயிக்கப்பட்ட அளவில் வசூலிக்கப்படுகிா…? என்று பயணிகளிடம் கேட்டறிந்தாா். ஆட்டோ ஓட்டுநா்கள் அதிக கட்டணம் வசூலித்தால் புகாா் தெரிவிக்க அறிவுறுத்தினாா்.
ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர் தா்ப்பகராஜ் தெரிவிக்கையில்;
2025 ஜனவரி முதல் பிப்ரவரி வரை 53 ஆயிரத்து 116 உள்நோயாளிகள், ஒரு லட்சத்து 78 ஆயிரத்து 546 புற நோயாளிகள் சிகிச்சை பெற்றுள்ளனா்.
இங்குள்ள சிறுநீரகவியல் பிரிவில் (டயாலிசிஸ்) 25 சிறுநீரகத் தூய்மைக் கருவிகள் கொண்டு மாதம்தோறும் சராசரியாக 1,400 பேருக்கு டயாலசிஸ் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாளொன்றுக்கு சராசரியாக 3170 புறநோயாளிகளும், 955 உள் நோயாளிகளும் தங்கி சிகிச்சை பெறுகின்றனர். மாதத்திற்கு சராசரியாக 1040 மகப்பேறு மருத்துவம் மேற்கொள்ளப்படுகின்றன. அவற்றில் சராசரியாக 635 சுகபிரசவம் மேற்கொள்ளப்படுகின்றது, என்றாா்.
கைபேசி எண்ணிற்கு
அவசர சிகிச்சை பிரிவில் இருக்கும் கைபேசி எண்ணிற்கு மாவட்ட ஆட்சி தனது தொலைபேசியில் இருந்து போன் செய்து தொடர்பு கொள்ள முயற்சித்தார் அப்போது அவசர சிகிச்சை பிரிவினை இருக்கும் கைப்பேசியில் போதிய அளவு சிக்னல் இல்லாத காரணத்தினால் அவரால் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனை தொடர்ந்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ஹரிஹரனிடம் அவசர சிகிச்சை பிரிவுகள் இருக்கும் கைபேசி எண்ணை சிக்னல் கிடைக்கும் மொபைல் நெட்வொர்க்கிற்கு மாற்றும்படி அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது, மருத்துவக் கல்லூரி முதல்வா் ஹரிஹரன், கண்காணிப்பாளா் மாலதி, மாவட்ட சுகாதார அலுவலா் பிரகாஷ் மற்றும் மருத்துவா்கள், அரசுத் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.
