Close
மே 21, 2025 3:27 காலை

செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆட்சியர் ஆய்வு..!

ஆய்வு கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர்

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு,செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்  மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் ஆய்வு மேற்கொண்டார்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்ந்த அலுவலர்களின் செயல்பாடுகள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பாக ஊராட்சி ஒன்றியங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்தும், பணிகளின் முன்னேற்றம் மற்றும் துறை அலுவலர்களின் செயல்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

அதனடிப்படையில் தண்டராம்பட்டு மற்றும் செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பாக தண்டராம்பட்டு, செங்கம் மற்றும் புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களான கலைஞரின் களவு இல்லம் ஊரக குடியிருப்பு பழுது நீக்கம் செய்யும் திட்டம், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், இலங்கைத் தமிழர்கள் வீடுகட்டும் திட்டம் மற்றும் பிரதம மந்திரி ஜன்மன் திட்டத்தில் வீடு கட்டும் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தார்.

மேலும் சட்டமன்ற உ றுப்பினர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம், பிரதம மந்திரி கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம், தூய்மை பாரத இயக்கத் திட்ட ம் , முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்,

நமக்கு நாமே திட்டம், பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம், அயோத்திதாச பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டம் மற்றும் குடிநீர் திட்டப்பணிகள் உள்ளிட்ட அனைத்து திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஊராட்சிகள் வாரியாக ஆய்வு மேற்கொண்டு, ஒப்பந்ததாரர்கள் பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் விரைந்து முடிக்கவும், ஊராட்சிகளில் குறைவாக வரி வசூல் செய்துள்ள அலுவர்களை விரைந்து வரி வசூல் செய்யவும் அறியுறுத்தினார்.

தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், தண்டராம்பட்டு மற்றும் செங்கம் வட்டாட்சியர் அலுவலகங்களில் ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், பட்டா மாற்றம் ,

சாதிசான்றிதழ், வருமானவரி சானறிதழ் உள்ளிட்ட சான்றிதழ்கள் வேண்டி விண்ணப்பித்தவர்களுக்கு உரிய ஆவணங்களுடன் சரியாக இருக்கும்பட்சத்தில் உடனுக்குடன் ஒப்புதல் அளித்து வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வருவய்த் துறைச்சார்ந்த அவர்களுக்கு அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, செங்கம் பேரூராட்சியில் உள்ளகம் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அரசினர் மாணவியர் விடுதியில் ஆய்வு மேற்கொண்டு மாணலிகளிடம் உணவு பட்டியல் முறை , அடிப்படை வசதிகள் குறித்தும்,

மாணவிகளை தனித்தனியாக அழைத்து அவர்களிடம் தேவைகள் குறித்தும் கேட்டறிந்தார். மேலும் விடுதியில் உள்ள சமையல் கூடத்தினை ஆய்வு மேற்கொண்டு உணவினை சுகாதாரமாக சமைத்து வழங்க அறிவுறுத்தினார். கூடத்தினை ஆய்வு மேற்கொண்டு சுகாதாரமாக சமைத்து வழங்க அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) கிருஷ்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் (ஊரக வளர்ச்சி) இளங்கோ, உதவி திட்ட அலுவலர்கள், தண்டராம்பட்டு, செங்கம் வட்டாட்சியர்கள் , அலுவலர்கள் மற்றும் அரசு துறைச்சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top