தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை மற்றும் உள்ளாட்சி துறைக்குச் சொந்தமான இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகள், இயக்கங்கள், ஜாதி, மத ரீதியிலான அனைத்துக் கொடி கம்பங்களையும் அகற்ற வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
இதன் அடிப்படையில், கொடிக் கம்பங்களை அகற்றுவது குறித்து அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் பேசியதாவது:
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை மாநிலம் முழுவதும் சாலைகள் மற்றும் பொது இடங்களில் போக்குவரத்து பாதிப்பு மற்றும் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்கும் பொருட்டு தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் பொது இடங்களில் நிறுவப்பட்டுள்ள அனைத்து அரசியல் கட் சிகள் இயக்கங்கள் மற்றும் சாதி, மத ரீதியிலான அமைப்பினரின் அனைத்து கொடிக் கம்பங்களையும் அகற்றிட வேண்டுமென உ த்தரவிட்டுள்ளது .
திருவண்ணாமலை மாவட்டத்தில் கணக்கெடுப்பின்படி அரசியல் கட்சிகள், ஜாதி, மதம் மற்றும் பல்வேறு அமைப்புகள் சாா்ந்த 4, 299 கொடிக் கம்பங்கள் உள்ளன. இவற்றில் 1767 கொடிகம்பங்கள் அடிப்படை கட்டமைப்புகளுடனும், 2532 கொடிகம்பங்கள் அடிப்படைகட்டுமானமின்றி நிறுவப்பட்டுள்ளன.
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சியினர் மற்றும் சாதி, மதரதியிலான அமைப்பினர் தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி துறைக்கு சொந்தமான இடங்கள் மற்றும் ஏனைய பொது இடங்களில் தங்களது கட்சி மற்றும் அமைப்பு சார்ந்த கொடிக்கம்பங்களைதாமாக முன்வந்து அகற்றிடவேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் இக்கூட்டத்தில் அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு அறிவுறுத்தினார்.
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையி ன் உத்தரவின்படியும் , மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தியதைதொடர்ந்தும், திருவண்ணாமலை மாவட்டத்தில் பொது இடங்களில் உள்ள தங்களது அரசியல் கட்சி மற்றும் இயக்கம் சார்ந்த கொடி கம்பங்களை அகற்றிட உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் தெரிவித்தனர்.
கூட்டத்தில் மாவட்ட எஸ்பி எம்.சுதாகா், வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், திருவண்ணாமலை மாநகராட்சி ஆணையா் காந்திராஜ் மற்றும் அரசியல் கட்சிப் பிரமுகா்கள் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.