Close
ஏப்ரல் 4, 2025 12:48 மணி

அலங்காநல்லூர் அருகே மறவர்பட்டியில் வருடாந்திர பங்குனி பொங்கல் உற்சவ விழா..!

பங்குனிப் பொங்கல் நிகழ்வு

அலங்காநல்லூர்:

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியம், மறவர் பட்டி கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ மஞ்சமலை சுவாமி அருள்மிகு ஸ்ரீ முத்தாலம்மன் ஆகிய தெய்வங்களுக்கு வருடாந்திர பங்குனி பொங்கல் உற்சவ விழா கடந்த மாதம் செவ்வாய்க்கிழமை சாமி சாட்டுதல் நடைபெற்றது .

அதனைத் தொடர்ந்து,தொடர்ந்து வெள்ளிக்கிழமை பூசாரிக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும் நேர்த்திக்கடன் செலுத்துபவர்களுக்கு காப்பு கட்டுதல் தொடர்ந்து கும்மி பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. சனிக்கிழமை அன்று பிடிமம் கொடுத்தல் ஞாயிற்றுக்கிழமை கும்மி பாட்டு கலை நிகழ்ச்சி திங்கட்கிழமை அன்று ஊத்துக்காடு சென்று தீர்த்தம் எடுத்து வந்து அருள்மிகு கன்னிமார் கருப்புசாமி கோவில் பொங்கல் வைத்து அபிஷேகம் ஆராதனை செய்தனர்.

செவ்வாய்க்கிழமை அன்று அருள்மிகு ஸ்ரீ விநாயகர் காளியம்மன் கோவில் முத்தாலம்மன் கோவில் மஞ்ச மலையாண்டி கோவில் ஆகிய தெய்வங்களுக்கு அபிஷேகம் ஆராதனை செய்யப்பட்டது. புதன்கிழமை அன்று முத்தாலம்மன்கண் திறக்கின்ற இடத்தில் உள்ள மேடையில் எழுந்தருளி கண் திறந்து ஆடை ஆபரணங்கள் அலங்காரம் செய்து வான வேடிக்கை ஆலயம் வந்து சேர்ந்தன வியாழக்கிழமை ஸ்ரீ முத்தாலம்மன் கோவில் பால்குடம் அக்னி செட்டிநாடு கிடாய் வெட்டுதல் பொங்கல் வைத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

அன்றைய தினம் அன்னதானம் நடைபெற்றன. வெள்ளிக்கிழமை மஞ்சள் நீராட்டுதல் வளையம் பிரித்தல் பிரசாதம் வழங்குதல் ஆகியவை உடன் திருவிழா நிறைவேறியது விழா விற்கான ஏற்பாடுகளை,மறவபட்டி கிராம பொதுமக்கள் செய்து இருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top