தமிழக முதல்வர் திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திருவண்ணாமலையில் தெற்கு மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் அணி சார்பில் ஆட்டோ சங்கப் பலகைகள் திறத்தல் மற்றும் 500 சாலையோர வியாபாரிகளுக்கு நல உதவிகள் வழங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் டாக்டர் எ.வ.வே. கம்பன் நல உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.
அண்ணா நகர், சாவல்பூண்டி சாலையில் உள்ள பூ மார்கெட் ஆட்டோ நிறுத்தத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்டோ நிறுத்தம் பெயர் பலகையும், திருவண்ணாமலை-போளூர் ரோடு, விஜய் பார்க் ஓட்டல் அருகில் விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டு நலத்துறைத் துறை அமைச்சர் உதயநிதிஸ்டாலின் ஆட்டோ நிறுத்தம் பெயர் பலகை திறப்பு விழா,
திருவண்ணாமலை, முத்து விநாயகர் கோவில் தெருவில் உள்ளசட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், நடைபாதை வியாபாரிகள் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் 500க்கும் மேற்பட்டோருக்கு, மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் டாக்டர் எ.வ.வே. கம்பன் வழங்கி சிறப்புரையாற்றினார்.
விழாவிற்கு மாவட்ட அமைப்பாளர் ஏ.ஏ.ஆறுமுகம் தலைமை வகித்தார். மாவட்ட துணை அமைப்பாளர்கள் ஜெயபிரகாஷ்,ஷாஜகான், எடப்பாளையம் ரவி, அர்சுணன், பாலசுந்தர், அன்பரசு, முத்துகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர், மாமன்ற உறுப்பினர் மெட்ராஸ் சுப்பிரமணி அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
விழாவில் ஒன்றியசெயலாளர் மெய்யூர் சந்திரன், மாவட்ட அமைப்பாளர்கள் டி.வி. எம்.நேரு. காலேஜ் குரவி குகணேஷ், வழக்கறிஞர் அருள்குமரன் , இராமபச்சையப்பன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
நிறைவாக நடைபாதை சங்கம் புஷ்பாராஜாமணி நன்றி கூறினார்.