திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கையை விரைவுப்படுத்த தலைமை ஆசிரியா்களுக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
சேத்துப்பட்டு வட்டார வள மையத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் 82 பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.
இதில், வட்டாரக் கல்வி அலுவலா்கள், வேலு, மன்னாா்சாமி ஆகியோா் கலந்து கொண்டு பேசியதாவது:
தமிழகத்தில் அரசு பள்ளிகள் தனியார் பள்ளிகளைவிட சிறப்பான முறையில் மாணவர்களுக்கு கல்வி வழங்குகிறது. தமிழக அரசு மாணவர்களுக்கு புத்தகம், நோட்டு புத்தகம், எழுதுபொருட்கள் சீருடை, வகுப்பறைகளில் கணினி வழி கல்வி, இருக்கை வசதி, பாதுகாக்கப்பட்ட குடிநீர், காலை உணவு மதிய உணவு, கழிப்பிடம் எனஅனைத்து நல திட்டங்களையும் வழங்கி தமிழ் வழி கல்விக்கு ஊக்குவிக்கின்றனர்.
தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளி மாணவர்கள் ஆங்கிலம் எழுதவும் படிக்கவும் பயிற்சி அளிக்கப்படுகிறது. கடந்த ஆண்டை விட 25-26 ஆம்கல்வி ஆண்டு மாணவரின் சேர்க்கை தீவிர படுத்த வேண்டும், மாணவர்களின் பெற்றோர்களை சந்தித்து அவர்களுக்கு எடுத்து கூறி மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும்.
ஒவ்வொரு கிராமத்திலும் இடைநின்ற மாணவர்கள் இருக்கக் கூடாது, கல்வி பயிலும் வயது உடைய சிறுவர்களை கண்டறிந்து அவர்களுக்கும் கல்வி வழங்க வேண்டும், அதற்கு பள்ளியின் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் பணியை சிறப்பாக செய்து ஒன்றியத்தில் தங்கள் பள்ளி தான் அதிக மாணவர்கள் சேர்க்கை எனபெருமை கொள்ள வேண்டும், இதற்கு ஆசிரியர்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
கூட்டத்தில் வட்டார வள மைய மேற்பாா்வையாளா் தங்கலாசி, ஒருங்கிணைப்பாளா்கள் திரிபுரசுந்தரி, சக்திவேல் மற்றும் ஆசிரியா் பயிற்றுநா்கள் கலந்து கொண்டனா்.