கோயில் நகரம் என கூறப்படும் காஞ்சிபுரத்தில் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது அருள்மிகு சுந்தராம்பிகை உடனுறை கட்சபேஸ்வரர் ஆலயம்.
ஆண்டுதோறும் இத்திரு கோயிலில் இருந்து சுவாமி அம்பாள் இருவரும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ள தாயார் குளம் பகுதியில் மூன்று நாள் தெப்ப உற்சவத்தில் பங்கேற்பது வழக்கம்.
அவ்வகையில் 19ஆம் ஆண்டு எப்போ உற்சவ விழா நேற்று தொடங்கி மூன்று நாள் நடைபெறுகிறது. முதல் நாள் விழாவில் திருக்கோயிலிலிருந்து அருள்மிகு சுந்தராம்பிகை உடனுறை அருள்மிகு கச்பேஸ்வரர் சிறப்பு மலர் அலங்காரத்தில் வேகவதி ஆற்றங்கரையில் அமர்ந்துள்ள தாயார் குளக்கரையில் உள்ள தர்மலிங்கேஸ்வரர் ஆலயத்தில் எழுந்தருளி சிறப்பு பூஜைகளுக்கு பின் தெப்பத்தில் எழுந்தருளினார்.
முதல் நாள் தெப்ப உற்சவத்தில் மூன்று முறை திருக்குளத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு இறையருள் அளித்தார்.
காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் மாமன்ற உறுப்பினர்கள் சுப்புராயன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் இதில் கலந்துகொண்டு தீப ஆராதனை செய்து குடும்ப நலம் வேண்டி இறையருள் பெற்றனர்.