Close
ஏப்ரல் 5, 2025 5:04 மணி

குற்றாலநாதர் திருக்கோவில் சித்திரை விஷு திருவிழா: கொடியேற்றத்துடன் தொடங்கியது

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் அமைந்துள்ளது குற்றாலநாதர் குழல் வாய்மொழி அம்மை திருக்கோவில். பஞ்ச சபைகளில் இரண்டாவது சபையான சித்திர சபை இந்தக் கோவில் தான் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டிற்கான சித்திரை விஷு திருவிழா இன்று காலை கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கொடிமரத்திற்கு பால், சந்தனம், மஞ்சள் பொடி, திரவியம் ஆகிய பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் தினமும் சிறப்பு அலங்காரம், அபிஷேகம், மற்றும் வீதி உலா நடைபெறும். திருக்கோவில் நிகழ்ச்சிகள் அனைத்துமே சித்திர சபை வீதிகளில் நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு சித்திரை சபை பாலாலயம் செய்து உள்ளதால் திரு தேரோட்டம் நடைபெறாது. மற்றும் வீதி உலா கோவில் உட்பிரகாரத்தில் நடைபெறும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து வருகின்ற 14ஆம் தேதி விழாவில் முக்கிய நிகழ்வான தீர்த்தவாரி நடைபெற உள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top