Close
ஏப்ரல் 7, 2025 7:30 காலை

குப்பநத்தம் அணையிலிருந்து தண்ணீர் திறந்து வைத்த துணை சபாநாயகர்..!

அணையிலிருந்து தண்ணீர் திறந்து வைத்த துணை சபாநாயகர்

செங்கம் வட்டம் குப்பநத்தம் அணை நீர்த்தேக்கத்திலிருந்து விவசாய பாசனத்திற்காக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தண்ணீர் திறந்து வைத்தார் . இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் தா்ப்பகராஜ், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, சட்டமன்ற உறுப்பினர்கள் கிரி, சரவணன், மாநில தடகள சங்க துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகர் தெரிவிக்கையில்,

தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையின்படி , திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டத்தில் அமைந்துள்ள குப்பநத்தம் அணையின் முழு நீர்மட்டம் 59.04 அடி ஆகும். அணையின் முழு கொள்ளளவு 700.00 மி.கன அடியாகும். நேற்று காலை 6.00 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 59.04 அடி மற்றும் அணையின் கொள்ளளவு 700.00 மி.கன அடி தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும் அடிப்படை தேவைக்கான குடிநீர், அணை பராமரிப்பு மற்றும் நீர் ஆவியாதல் மூலம் ஏற்படும் இழப்பும் சேர்ந்து 106.92 மி.க.அடி தண்ணீர் தேவை. ஆகவே அணையில் மீதம் உள்ள நீர் 593.08 மி.கனஅடி பாசனத்திற்கான தண்ணீர் இருப்பு ஆகும்.

மேலும் குப்பநத்தம் நீர் தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக 47 ஏரிகளில் குறைந்துள்ள தண்ணீரின் கொள்ளளவை நிரப்பும் பொருட்டு இன்று (05.04.2025) முதல் நாள் ஒன்றுக்கு 240.00 கன அடி வீதம் 03.05.2025 அன்று காலை 10.00 மணி வரை 28 நாட்களுக்கு 9432.76 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும் வகையில் ஒரே தவணையாக 580.61 மி.கன அடி தண்ணீர் திறந்து விடப்படும். எனவே விவசாயிகள் இப்பாசன நீரை சிக்கனமாகவும், துறை பணியாளர்களின் அறிவுரையின்படி, சிறந்த முறையில் விவசாயத்திற்கு பயன்படுத்தி நல்ல விளைச்சலை பெற்றிட எல்லா வகையிலும் ஒத்துழைக்குமாறு சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் ராஜ்குமார், திருவண்ணாமலை உதவி செயற்பொறியாளர் சிவக்குமார், செங்கம் உதவி பொறியாளர் ஹரிஹரன், செங்கம் வட்டாட்சியர் முருகன், நகர செயலாளர் அன்பழகன், ஒன்றிய செயலாளர்கள் சிவசேமன், செந்தில்குமார், மனோகரன், ஏழுமலை, நகராட்சி தலைவர் சாதிக்பாஷா, முன்னாள் பேரூராட்சி தலைவர் சென்னம்மாள் முருகன், விவசாயிகள்  மற்றும் அரசு துறைச்சார்ந்த அலுவலர்கள் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top