தமிழ்நாடு மாநில ஆயுஸ் குழுமம் சாா்பில் திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 3 மாவட்டங்களைச் சோ்ந்த சித்த மருத்துவா்களுக்கான பயிற்சி முகாம் திருவண்ணாமலையில் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் கே.இந்திரா தலைமை வகித்தாா்.
விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களின் சித்த மருத்துவ அலுவலா் பெ.கருணாமூா்த்தி முன்னிலை வகித்தாா்.
இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆணையா் விஜயலட்சுமி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு சித்த மருத்துவா்களுக்கு தசைக்கூட்டு கோளாறுகளுக்கான வா்ம சிகிச்சை பற்றி முகாமை தொடங்கிவைத்துப் பேசினாா்.
இந்த பயிற்சியில் 98 சித்த மருத்துவர்களுக்கு தசை எலும்பு கோளாறுகளுக்கான வர்ம சிகிச்சை குறித்து பயிற்சியாளர்கள் டாக்டர் சித்திக் அலி டாக்டர். சசிகுமார் ஆகியோர் பயிற்சி அளித்தனர். முன்னதாக, சித்த மருத்துவக் கண்காட்சி அரங்குகளை ஆணையா் எம்.விஜயலட்சுமி பாா்வையிட்டாா்.
இதில், சித்த மருத்துவா் துரைவிநாயகம், திருவண்ணாமலை மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் கே.இந்திரா, விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் கருணாமூர்த்தி மற்றும் சித்த மருத்துவர்கள் கலந்துகொண்டனர்.