Close
ஏப்ரல் 7, 2025 11:16 மணி

சமய வழிபாட்டுக்கு உதவக் கூறி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்த தெலுங்கு மொழி சிறுபான்மை கத்தோலிக்க கிறிஸ்தவ குடும்பங்கள்

27 வருடங்களாக கேட்கும் சமய வழிபாட்டுக்கு உதவக் கூறி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்த தெலுங்கு மொழி சிறுபான்மை கத்தோலிக்க கிறிஸ்தவ குடும்பங்கள்..

ஒரே மதத்தில் நவீன தீண்டாமையா ? என கேள்வி எழுப்பி ,காலில் விழுந்து கேட்கிறோம் தயவுசெய்து உதவுங்கள் என ஆட்சியரிடம் கண்ணீர் மல்க பெண்கள் புகார்..

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அடுத்த அமைந்துள்ளது ராவத்தநல்லூர் கண்டிகை கிராமம். இங்கு 186 வருட தொன்மை மிகு அமல அன்னை ஆலயம் அமைந்துள்ளது.

இங்கு இங்கு தெலுங்கு மொழி சிறுபான்மை சேர்ந்த 350 கத்தோலிக்க கிறிஸ்தவ குடும்பங்கள் உள்ளது. இதேபோல் தமிழ் மொழி கிறிஸ்தவர்கள் உள்ளனர்.

இந்த ஆலயத்தில் வழிபட தெலுங்கு மொழி பேசும் குடும்பங்களுக்கு அனுமதி இல்லை என கூறி வழிபாடு தடை செய்யப்பட்டது.

இதற்காக நீதிமன்றம் சென்று அவர்கள் அளித்த தீர்ப்பின்படி செயல்படக் கூறி சென்னை மயிலை உயர்நிலை மறை மாவட்டம் மற்றும் செங்கல்பட்டு மறை மாவட்டம் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது.

ஆனால் இதுவரை எந்தவித செயல்பாடும் இல்லாத நிலையில் அரசியல் சாசன சட்ட நியமம் 25 2 (A)படி நடந்து கொள்ள காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி கத்தோலிக்க கிறிஸ்தவ குடும்பங்கள் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மக்கள்குறை தீர்க்கும் நாள் கூட்ட அலுவலகம் முன்பு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதனால் அப்பகுதி சற்று பரபரப்பு ஏற்பட்டது.  பின் காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய பின் மாவட்ட ஆட்சியர் கூட்டம் முடிந்தபின் அவர்களை நேரில் சந்தித்தார்.

கடந்த 27 வருடங்களாக தொலைத்திருந்த வழிபாட்டு உறுதி மீட்டுத் தரக் கோரியும், கல்வி திருமணம் உள்ளிட்ட எதனையும் தங்களால் செய்ய இயலாத நிலையில் நவீன தீண்டாமை செயலாக இந்த அமல அன்னை ஆலய பிரிவினரால் மேற்கொள்ளப்படுவதாகவும் குற்றம் சாட்டினர்.

ஒரு கட்டத்தில் பெண்கள் குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் கால்களில் விழ முயற்சித்த போது மாவட்ட ஆட்சியர் எச்சரித்து, இதுபோன்ற செயல் செய்யக்கூடாது எனக் கூறி, மாவட்ட நிர்வாகம் எப்போதும் அனைவருக்கும் தேவைகளை பூர்த்தி செய்து உள்ளதாகவும், இதுகுறித்து மறைமலை மாவட்டத்திடம் பேசி சுமுக நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்வதாகவும் தெரிவித்தார்.

மாவட்ட ஆட்சியரிடம் மாணவிகள் கல்வி கற்பதில் பெரும் சிரமம் சந்தித்து வருவதாகவும், இளைஞர் ஒருவர் தன்னுடைய படிப்பு திருமணம், வேலை வாய்ப்பு என அனைத்திற்கும் இச்சம்பவம் ஒரு முட்டுக்கட்டையாக உள்ளதாகவும் உடனடியாக மாவட்ட நிர்வாகம் அவர்களுக்கு தக்க அறிவுரை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

கடந்த 27 ஆண்டுகளாக இந்த பிரச்சனை நீண்டு வரும் நிலையில் மயிலை மற்றும் செங்கல்பட்டு மறை மாவட்டங்கள் இதனை உடனடியாக தீர்த்து வைக்க வேண்டும் என்பதும், ஒரே பிரிவு மதத்தினரிடம் இதுமாதிரியாக நடந்து கொள்வது எந்த விதத்தில் ஏற்பில்லை என அனைவரும் கூறி வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top