உத்திரமேரூர் அருகே ஏழை எளிய மக்களுக்குமளிகை பொருட்கள் மற்றும் குழந்தைகளுக்கு புத்தாடை கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்தில் உள்ள விசூர் ஊராட்சியில் நடைபெற்று வரும் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா பாரதியார் உண்டு உறைவிட சிறப்பு பயிற்சி மையத்தில் உறைவிட பள்ளி மாணவ மாணவிகளுக்கு புத்தாடை மற்றும் கல்வி உபகரணங்கள், மேற்படிப்பு படிக்கின்ற மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை,வயது முதிர்ந்த ஏழை எளிய மக்கள் 100 நபர்களுக்கு மளிகை பொருட்கள் ஆகியவை இன்று வழங்கப்பட்டன.
இந்நிகழ்விற்கு ஸ்ரீ சத்ய சாய் சேவா நிறுவனத்தின் லலிதா சீனிவாசன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் சத்யா எட்டியப்பன் முன்னிலை வகித்தார். ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா நிறுவனத்தின் தலைவர் டாக்டர் கல்பனா ஷங்கர் கலந்து கொண்டு கல்வி உதவித்தொகை வழங்கி சிறப்புரையாற்றினார்.
ஸ்ரீ சத்யா சாய் சேவா நிறுவன ஒருங்கிணைப்பாளர்கள் வேதா சீனிவாசன், ரவி ஆகியோர் வாழ்த்துரை வழங்கி குழந்தைகளுக்கு புத்தாடைகள் மற்றும் கல்வி உபகரணங்களை வழங்கி வாழ்த்துரை வழங்கினர்.
முன்னதாக முதன்மை மேலாளர் கிருபாகரன் வரவேற்புரை ஆற்றினார். 100 கிராமங்களை தத்தெடுத்து மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டம் குறித்தும், தற்பொழுது செயல்படுத்தப்பட்டுள்ள விவரங்களை துணைத் தலைவர் பிரேம் ஆனந்த் எடுத்துரைத்தார்.
காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருவள்ளூர் வேலூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து மாணவ மாணவிகள் களப்பணியாளர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை உதவி பொது மேலாளர் மோகனவேல், முதுநிலை திட்ட மேலாளர் தூயவன் சுந்தர் , மைய பொறுப்பாளர் வள்ளி ஆகியோர் செய்து இருந்தனர்