Close
ஏப்ரல் 16, 2025 9:10 காலை

கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமத்துவ வளைகாப்பு நிகழ்ச்சி..!

சீர்வரிசை பொருட்களை வழங்கிய எம்பி மற்றும் எம்எல்ஏ

கலசபாக்கம் அடுத்த தென்மாதிமங்கலம் ஊராட்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 100 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமத்துவ வளைகாப்பு நிகழ்ச்சியை அண்ணாதுரை எம்பி  கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் தொடங்கி வைத்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த தென்மாதிமங்கலம் ஊராட்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 100 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமத்துவ வளைகாப்பு நிகழ்ச்சிநடைபெற்றது.  நிகழ்ச்சியில் சரவணன் எம்எல்ஏ தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட கவுன்சிலர் வழக்கறிஞர் சுப்பிரமணியம், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் சிவக்குமார், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் அன்பரசி ராஜசேகரன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சரண்யா, அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட  திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர்அண்ணாதுரை , வளைகாப்பு நிகழ்வை தொடங்கிவைத்து பேசியதாவது,

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஆரோக்கியத்தை பாதுகாக்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனி கவனம் செலுத்தி திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதில் ஒன்றுதான் இந்த சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் 100 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெறுகிறது.

இவ்விழாவில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சத்தான மற்றும் சரிவிகித உணவின் அவசியத்தை உணர்த்தும் வகையில் பாரம்பரிய உணவு மற்றும் கர்ப்ப காலங்களில் எடுத்துக்கொள்ளும் உணவு சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது. அதில் சிறுதானியங்கள், காய்கறிகள், கீரை வகைகள் போன்றவை கண்காட்சியாக வைக்கப்பட்டது.

மேலும் துணை சுகாதார நிலையம் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் ஏற்படுத்தப்பட்டு அனைத்து கர்ப்பிணி தாய்மார்களுக்கும் எடை உயரம் மற்றும் ரத்த அழுத்தம் சர்க்கரை அளவு ஆகிய பரிசோதனைகள் செய்யப்பட்டது. மேலும் நமது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் ஆரோக்கியத்திற்காகவும் தனி கவனம் செலுத்தி சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். கடந்த நான்கு ஆண்டுகளாக கர்ப்பிணி தாய்மார்களுக்கு தாய் வீட்டு சீதனமாக நமது முதல்வர் வளைகாப்பு விழா நடத்தி வருகிறார்.

மகப்பேறு காலத்தில் சத்தான உணவுகளை பெறவும் உடல் நலனில் அக்கறை செலுத்தவும் பராமரிப்பு உதவித்தொகையினைநமது முதல்வர் மு.க.ஸ்டாலின் தாய் உள்ளத்துடன் வழங்கி வருகிறார். மேலும் கர்ப்பிணி பெண்கள் மருத்துவ ஆலோசனைகளை பெற்று ஆரோக்கியமான குழந்தைகளை பெறுவதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இது போன்ற சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்படுகிறது.

விழாவில் மாவட்ட சமூக நல அலுவலர் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தை பற்றியும் குழந்தை திருமணம் தடுத்தல் குறித்து உதவி எண்ணாக 1098, 181, 1930 போன்ற பதவிகள் மற்றும் ஐ சி இ உபகரணங்கள் வழங்கப்பட்டது. மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் சட்டங்கள் திட்டங்கள் குறித்த விரிவான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளது என அண்ணாதுரை எம்பி கர்ப்பிணி தாய்மார்களுக்கு அறிவுரை வழங்கினார். அதனைத் தொடர்ந்து அனைவருக்கும் அறுசுவை உணவும் வழங்கப்பட்டது.

விழாவில் மாவட்ட திட்ட அலுவலர் மீனாம்பிகை, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய குழு தலைவர் மற்றும் துணைத் தலைவர், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top