Close
ஏப்ரல் 16, 2025 4:51 காலை

ஆலத்தூர் பஞ்சாயத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் மக்கள் நேர்காணல் முகாம்..!

நிகழ்ச்சியில் பங்கேற்ற கோட்டாட்சியர் தியாகராஜன்,பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் சங்கர், பட்டுக்கோட்டை வட்டாட்சியர் தர்மேந்திரா, தஞ்சை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் வித்யா, மதுக்கூர் வேளாண் துணை இயக்குனர் திலகவதி ஆகியோர்.

மதுக்கூர் வட்டாரம், ஆலத்தூர் பஞ்சாயத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் தலைமையில் நடைபெற்ற மக்கள் நேர்காணல் முகாம்.

பட்டுக்கோட்டை வட்டத்திற்கான மக்கள் நேர்காணல் முகாம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இரண்டாம் புதன்கிழமையான நேற்று (9ம் தேதி) மதுக்கூர் வட்டாரம் ஆலத்தூர் கிராமத்தில் உள்ள வீஆர்எம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் கலந்துகொண்டு. மக்கள் நேர்காணல் முகாம் என்பது அரசிடம் இருந்து மானியங்களை பெறுவதற்கு வழிமுறைகள், தேவையான ஆவணங்கள், தகுதிகள் ஆகியவற்றை விவசாயிகள் அறிந்துகொள்ள முடிகிறது.

மேலும் ஒவ்வொரு துறை வாரியாக ஒரே இடத்தில் இருந்து பெற்றுக் கொள்வதற்கான அருமையான வாய்ப்பு இந்த நேர்காணல் நிகழ்ச்சி. நலத்திட்டங்கள் குறிப்பிட்ட பயனாளிகளுக்கு மட்டும் சென்று சேராமல் அரசின் திட்டங்கள் சமூகத்தின் அனைத்து நிலை மக்களுக்கும் சென்று சேர வழிவகுக்கிறது.

மேலும் அரசின் அனைத்து திட்டங்களையும் விவசாயிகள் அறிந்துகொண்டு அதற்குத் தேவையான மானிய உதவிகளை அரசிடம் இருந்து பெற்று வாழ்க்கைதரத்தை உயர்த்திக்கொள்வதற்கு மக்கள் நேர்காணல் முகாம் மிகச் சிறந்த வாய்ப்பாகும்.

இதனை பட்டுக்கோட்டை வட்டத்தை சேர்ந்த விவசாயிகள் பயன்படுத்திக்கொண்டு தங்களுடைய கோரிக்கைகளை மனுக்களாக அளித்தும் திட்டங்கள் குறித்த விபரங்களை அந்தந்த துறைவாரியாக மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள ஸ்டால்களில் உள்ள தொடர்பு அலுவலர்களை கேட்டறிந்து பயன்படவும் கேட்டுக்கொண்டார்.

நேற்று மொத்தம் 315 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பல்வேறு துறைவாரியாக பெறப்பட்டுள்ளது. 113 பயனாளிகளுக்கு சுமார் 34 லட்சம் மதிப்பிலான திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. வருவாய்த்துறை, வேளாண்மை துறை, தோட்டக்கலை, சுகாதாரம், கால்நடை பராமரிப்பு, சமூக நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறையினரின் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டு தங்கள் துறை வாரியான திட்டங்களை கலந்து கொண்ட பொதுமக்களிடம் தெளிவாக விளக்கி கூறினார்கள்.

மேற்கண்ட துறைகள் வாரியாக கருத்துக் கண்காட்சியும் அமைக்கப்பட்டு நேரடியாகவும் பொது மக்களுக்கு விளக்கிக் கூறப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் சங்கர் தலைமையில் பட்டுக்கோட்டை வட்டாட்சியர் தர்மேந்திரா ஒருங்கினணப்புடன் நடைபெற்றது.

தஞ்சை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் வித்யா மற்றும் மாவட்ட அளவிலான அனைத்து துறை உயர் அலுவலர்களும் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு நமது பொதுமக்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top