திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த பஜார் வீதியில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பில் கலசபாக்கத்தில் புதிதாக கலைஞர் நூலகத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்து பேசியதாவது:-
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் திமுக இளைஞரணி சார்பில் கலைஞர் நூலகம் அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், இளைஞர் அணி செயலாளரும் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், ஆகியோர் அறிவுறுத்தலின்படி கலை, இலக்கியம், வரலாறு, சிறுகதை, நாவல், மற்றும் போட்டித் தேர்வுக்கு தேவையான நூல்கள் அனைத்தும் நூலகத்தில் இடம் பெற்றுள்ளது.
தமிழ் மற்றும் ஆங்கிலம் தினசரி நாளிதழ், வார இதழ், மாத இதழ் ஆகியவை நூலகத்தில் உள்ளதால் பொது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் நாளிதழ்களையும் புத்தகங்களையும் மாணவர்களும் இளைஞர்களும் இளம் பெண்களும் ஆர்வத்துடன் வந்து புத்தகங்களை செய்தித்தாள்களை தினந்தோறும் படித்து வருகிறார்கள் இதனால் நூலகத்தில் மாணவர்களுக்கு தேவையான புத்தகங்களையும் செய்தித்தாள்களையும் தினம்தோறும் பெற வேண்டும் என்றார்.
மேலும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருவண்ணாமலையில் கலைஞர் நூலகத்தை வைத்தேன். இந்த நிலையில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட இளைஞரணி சார்பில் மேலும் கலசபாக்கம் தொகுதியில் பஜார் வீதியில் கலைஞர் நூலகத்தை இப்போது திறந்து வைத்துள்ளோம். அதன் மூலம் கல்வித் திறனும் பொது அறிவும் மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் அனைத்து மக்களுக்கும் கல்வித் திறன் உயர வேண்டும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, மாநில தடகள சங்கத் துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் பிரபு கஜேந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, சட்டமன்ற உறுப்பினர்கள் சரவணன் , கிரி, ஒன்றிய திமுக செயலாளர்கள் சிவகுமார், சுப்பிரமணியன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நரேஷ், நகர செயலாளர் சௌந்தர்ராஜன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பச்சையப்பன், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்கள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான ஒரு கலந்து கொண்டனர்.