முன்னாள் மாணவர் சந்திப்பு என்பது, ஒரு கல்வி நிறுவனத்தில் படித்த மாணவர்களையும், ஆசிரியர்களையும் மீண்டும் ஒன்று கூடி, பழைய நினைவுகளைப் பகிர்ந்து, புதிய உறவுகளைப் பழகும் ஒரு நிகழ்வு ஆகும். இதில் முன்னாள் மாணவர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்வதுடன், தற்போதைய மாணவர்களுக்கு வழிகாட்டுதலையும் வழங்குகின்றனர்.
முன்னாள் மாணவர் சந்திப்பு ஒரு நிறுவனத்தில் படித்த மாணவர்களின் வெற்றிகரமான பயணத்தை நினைவுகூர்கிறது. இது பழைய மாணவர்களுக்கு ஒரு நல்ல நெட்வொர்க்கிங் தளமாகவும், புதிய உறவுகளைப் பழக ஒரு வாய்ப்பாகவும் அமைகிறது. மேலும், தற்போதைய மாணவர்களுக்கு ஒரு முன்மாதிரியாகவும், ஊக்கமளிக்கும் நிகழ்வாகவும் உள்ளது. அதுவும் 57 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் நமது இளமைக் கால நண்பர்களை சந்திப்பது என்றால் கேட்கவா வேண்டும் .
1967-68 ஆம் ஆண்டு
அப்படிப்பட்ட ஒரு நிகழ்வு திருவண்ணாமலை நூற்றாண்டு கண்ட மிகவும் சிறப்பு வாய்ந்த டேனிஷ் மிஷன் உயர்நிலைப் பள்ளியில் 1967-68 ஆம் ஆண்டு SSLC படித்து முடித்த மாணவ, மாணவிகள் தங்கள் குடும்பத்தினருடன் சுமார் 57 ஆண்டுகள் கழித்து மீண்டும் சந்திக்க உள்ளனர். இந்த சந்திப்பு வருகிற ஏப்ரல் 22 ந் தேதி திருவண்ணாமலை பைபாஸ் ரோடு பொன்னுசாமி திருமண மண்டப அரங்கில் நடைபெற உள்ளது.
இந்த சிறப்பு வாய்ந்த சந்திப்பிற்கு ஒருங்கிணைப்பாளராக இப்பள்ளியின் முன்னாள் மாணவர் திரு. பன்னீர்செல்வம், (ONGC, ஓய்வு) அவர்களை ஒருங்கிணைப்பாளராக கொண்டு ஒரு குழு அமைக்கப்பட்டு பல நண்பர்கள் உதவியுடன் இந்நிகழ்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு வாய்ந்த சந்திப்பில் திருவண்ணாமலை டேனிஷ் மிஷன் பள்ளியில் உயர்கல்வி பயின்று பின்னர் அரசு பொதுத்துறை வங்கிகள் உட்பட பல துறைகளில் உயர் பதவிகள் வகித்து தற்போது ஓய்வு பெற்றவர்கள் ஆவர்.
மேலும் புகழ்பெற்ற வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், வணிகர்கள், கல்வியாளர்கள், வெளிநாடுகளில் உயர் அதிகாரிகளாக பணிபுரிந்த நபர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் பங்கு பெறுவோர் அனைவரும் தற்போது 70 வயதுகளைக் கடந்தாலும், தனது இளமை காலத்து நண்பர்களைச் சந்திக்க ஆவலுடன் இருக்கின்றனர்.
எனவே திருவண்ணாமலை டேனிஷ் மிஷன் பள்ளியில் 67- 68 ஆம் ஆண்டு படித்து முடித்த மாணவ மாணவிகள் தங்கள் குடும்பத்துடன் ஏப்ரல் 22 ஆம் தேதி பொன்னுசாமி திருமண மண்டப அரங்கில் நடைபெற உள்ள முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.