Close
ஏப்ரல் 15, 2025 9:00 மணி

அம்பேத்கர் படத்திற்கு திமுக தெற்கு மாவட்ட செயலாளர் மாலை அணிவித்து மரியாதை..!

உறுதிமொழி எடுத்துக்கொண்ட திமுகவினர்

திருமங்கலம் :

மதுரை,திருமங்கலத்தில் அம்பேத்கர் திரு உருவப்படத்திற்கு, திமுக தெற்கு மாவட்டம் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

முதலமைச்சர் கழகத் தலைவர் மு க ஸ்டாலின் ஆணைக்கிணங்க திமுக தெற்கு மாவட்டம் சார்பாக திருமங்கலத்தில் திமுக அலுவலகத்தில் மதுரை தெற்கு மாவட்ட கழக செயலாளர் சேடபட்டி மு.மணிமாறன் தலைமையில் சட்ட மேதை அம்பேத்கரின்135 ஆவது பிறந்தநாள் நாளை முன்னிட்டு, திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், முன்னாள் எம்.எல்.ஏ. முத்துராமலிங்கம், நகரச் செயலாளர் ஸ்ரீதர்,அவைத் தலைவர் நாகராஜன் ஒன்றிய செயலாளர்கள் ஆலம்பட்டி சண்முகம்,மதன்குமார்,ராமமூர்த்தி,ஜெயச்சந்திரன்,கீர்த்திகா தங்கப்பாண்டி,திமுக நிர்வாகிகள்.விமல்,பாச பிரபு,ஜாகீர்,கவுன்சிலர்கள் சின்னச்சாமி,ஜஸ்டிமாவட்ட கவுன்சிலர் ஜெயராஜ், பொருளாளர் செல்வம்,முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் யசோதை சாமிநாதன்உள்ளிட்ட மதுரை தெற்கு மாவட்ட கழகத்தைச் சேர்ந்த மாவட்ட கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top