திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 247 பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்லம் வீடு கட்டும் ஆணையை சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, வழங்கினார்.
நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் பாரதி ராமஜெயம், தலைமை தாங்கினார். முன்னாள் ஒன்றிய குழு தலைவர் அண்ணாமலை, ஒன்றிய செயலாளர் ராமஜெயம், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் தமயந்தி ஏழுமலை, ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன், அனைவரையும் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, வீடு கட்டும் அரசு ஆணையை வழங்கி பேசியதாவது:-
தமிழகத்தில் குடிசையே இல்லாத கிராமமாக மாற்ற வேண்டும் அதற்காக கலைஞரின் கனவு இல்லத்தில் ஏழை எளிய மக்களுக்கு வீடு வழங்கப்படுகிறது இதன் மூலம் மக்கள் கலைஞர் கனவு இல்லத்தில் வீடு கட்டி சிறந்த முறையில் வாழ வேண்டும் அது மட்டும் இல்லாமல் தமிழகத்தை வளர்ச்சியான மாநிலமாக மாற்றுவதற்காக தமிழக முதல்வர் எண்ணற்ற திட்டங்களும் சலுகைகளும் வழங்கி வருகிறார். மே லும் சென்ற மறை கலைஞரின் கனவு இல்லத்தில் 300க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு வீடுகள் வழங்கப்பட்டது.
அதன் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்பொழுது 247 பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்லத்தில் வீடு கட்டும் ஆணையை வழங்கி கிராமங்களில் உள்ள வீடுகளை குடிசை இல்லா வீடாக மாற்ற வேண்டும். அதற்கு தனி கவனம் செலுத்தி இந்த கலைஞரின் கனவு இல்லத்தில் வீடு வழங்கப்பட்டு வருகிறது.
வீடு கட்டும் பணி விறுவிறுப்பாக செய்து பணிகளை முடித்து காலதாமதம் செய்யாமல் அரசு வழங்கும் மானியத்தை பெற்றுக் கொள்ளுங்கள். அதேபோல் அரசு வழங்கும் மானியம் வழங்குவதில் காலதாமதம் செய்தால் என்னிடம் கூறுங்கள் நான் உடனடியாக பேசி உங்களுக்கு அரசு வழங்கும் மானியத்தை உடனடியாக வழங்க பரிந்துரைசெய்கிறேன்.
இதன் மூலம் மக்கள் வீடு பெற்று சிறப்பான முறையில் கட்டி வருகிறார்கள் இதனால் மக்கள் அனைவரும் பெருமிதம் அடைந்து வருகிறார்கள் என்று சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, கூறினார்.
நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் பாலு, வட்டார வளர்ச்சி அலுவலர் கோபு, இன்ஜினியர்கள் அருணா, தமிழரசி, பிரசன்னா, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சிவராமன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பிரபாகரன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் வினோத்குமார், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் பிரகாஷ், சக்தி வே ல், மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கழக நிர்வாகிகள் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.