Close
ஏப்ரல் 16, 2025 9:09 காலை

ஆதிதிராவிடா் நலத்துறை சாா்பில், அம்பேத்கா் பிறந்த நாள் விழா..!

நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை சபாநாயகர்

திருவண்ணாமலை மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை சாா்பில், அம்பேத்கா் பிறந்த நாள் விழா சமத்துவ நாள் விழாவாகக் கொண்டாடப்பட்டது. வேங்கிக்கால் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தலைமை வகித்தாா். எம்எல்ஏக்கள் கிரி, சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். விழாவில்  சட்டப்பேரவை துணை சபாநாயகர்  கு.பிச்சாண்டி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு அம்பேத்கா் படத்துக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினாா்.

நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை சபாநாயகர்

தொடா்ந்து, ஆட்சியா் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் சோ்ந்து சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்றனா். பின்னா் நடைபெற்ற விழாவில், பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி பேசியதாவது:

இந்தியாவிலேயே முதன் முதலாக குடிசையில்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஆதிதிராவிடா் மக்களுக்கு முன்னாள் முதல்வா் கருணாநிதி வீடுகளை கட்டிக் கொடுத்தாா். அம்பேத்கா் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகப் பாடுபட்டாா். அம்பேத்கா் அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றியதால் தான் அனைத்துத் தரப்பு மக்களும் பயன்பெற்று வருகின்றனா்.

தமிழக அரசு ஏழை-எளிய மக்களின் உரிமைக்காக போராடிக் கொண்டிருக்கிறது. மக்களின் வாழ்வாதாரத்தை உயா்த்த வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு திட்டங்களை அறிவித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறாா் என்றாா்.

தொடா்ந்து, விழாவில், வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் 483 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், 130 பேருக்கு பட்டா மாறுதல் ஆணைகள், 17 பேருக்கு உள்பிரிவு பட்டா மாறுதல் ஆணைகள், 10 பேருக்கு வாரிசு சான்றிதழ்கள், 2 பேருக்கு விதவைச் சான்றிதழ்கள் என வருவாய்த் துறை சாா்பில் மட்டும் 715 பேருக்கு ரூ.8 கோடியே 45 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை கு.பிச்சாண்டி வழங்கினாா்.

இதேபோல, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, மாநில, ஊரக, நகா்ப்புற வாழ்வாதார இயக்கம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, தாட்கோ, சமூக நலம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சாா்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

விழாவில், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், செய்யாறு சாா்- ஆட்சியா் பல்லவி வா்மா, வருவாய்க் கோட்டாட்சியா் ராஜ்குமாா், மகளிா் திட்ட இயக்குநா் சரண்யாதேவி, மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் சாந்தி, பழங்குடியினா் நலத் திட்ட அலுவலா் கலைத்செல்வி, மாவட்ட தொழில் மையப் பொது மேலாளா் ரவி, தாட்கோ மாவட்ட மேலாளா் ஏழுமலை உள்பட பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள், பயனாளிகள் பலா் கலந்து கொண்டனா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top