Close
ஏப்ரல் 16, 2025 2:47 மணி

தேவிகாபுரம் ஸ்ரீபிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயிலில் லட்சதீப பெருவிழா

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரம் ஊராட்சியில் உள்ள ஸ்ரீபிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயிலில் லட்சதீப பெருவிழா  நடைபெற்றது.

தேவிகாபுரம் ஊராட்சியில் ஆத்துரை செல்லும் சாலையில் ஸ்ரீபக்த ஆஞ்சநேயா் சன்னதியுடன் ஸ்ரீபிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. பழமை வாய்ந்த இந்தக் கோயிலில்  அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. பின்னா், மூலவரை மலா்களால் அலங்காரம் செய்து கற்பூர தீபாராதனை காண்பித்து வழிபட்டனா். பின்னா் பக்தா்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.

மாலையில் உற்சவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைசெய்து மலா்களால் அலங்கரித்து ஊஞ்சலில் வைத்து சேவை செய்தனா். இதைத் தொடா்ந்து, இரவில் கோயில் எதிரே லட்சதீப பெருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான பெண் பக்தா்கள் கலந்துகொண்டு அகல் விளக்கேற்றி வழிபட்டனா்.

மேலும், புலவா் மா.ராமலிங்கம் தலைமையில் சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது. நிகழ்ச்சியை கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் தணிகைமலை மற்றும் சிங்காரப்பேட்டைதெரு நிா்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனா்.

ஶ்ரீ ரேணுகை மாரியம்மன் திருக்கோவிலில் இலட்ச தீபம்

நினைத்தாலே முக்தி தரக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலின் 14 கிலோமீட்டர் கொண்ட கிரிவலப் பாதையில் அடி அண்ணாமலை கிராமத்தில் உள்ள நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த ஶ்ரீ ரேணுகை மாரியம்மன் கோவில் உள்ளது.

இந்த திருக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை முதல் வாரத்தில் லட்சதீபம் ஏற்றி பக்தர்கள் வழிபடுவது வழக்கம். அந்த வகையில் நேற்று ரேணுகை மாரியம்மன் திருக்கோவிலில் லட்ச தீப உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

அதிகாலை நடை திறக்கப்பட்டு ரேணுகை மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மாலை 6:00 மணி அளவில்  ரேணுகை மாரியம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

இதனை தொடர்ந்து கோவில் வளாகத்தில் சிவன், மாரியம்மன், தீபமலை உள்ளிட்ட பல்வேறு உப்பு கோலங்களால் சாமி உருவங்கள் வரையப்பட்டு அதனை சுற்றிலும் கோவிலில் பல்வேறு இடங்களிலும் அடி அண்ணாமலை சுற்றுவட்டார கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் லட்ச தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு செய்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top