சேத்துப்பட்டு நகர அதிமுக சார்பில் கோடை வெயில் முன்னிட்டு நீர் மோர் பந்தலை திருவண்ணாமலை மத்திய மாவட்ட செயலாளர் ஜெயசுதா லட்சுமி காந்தன் திறந்து வைத்தார்.
சேத்துப்பட்டு வந்தவாசி சாலை காமராஜர் தெருவில் நகர அதிமுக சார்பில் இலவச நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. நகர செயலாளர் எம். ஜி.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். அவைத்தலைவர் ராமச்சந்திரன் நகர துணை செயலாளர் சிவசங்கரன் என்கிற பாபு தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் பரத் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட சிறுபான்மை பிரிவு துணைத் செயலாளர் இயேசுபாதம் அனைவரையும் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக திருவண்ணாமலை மத்திய மாவட்ட செயலாளர் முன்னாள் எம்எல்ஏ ஜெயசுதா லட்சுமி காந்தன் நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீர், தர்பூசணி, குளிர்பானங்கள், நீர்மோர் ஆகியவற்றை வழங்கி பேசுகையில்;
கிராமங்கள் தோறும் அதிமுக உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதனையும் தொடர்ந்து அதிமுக க்யூ ஆர் கோடில் நீங்கள் உங்கள் மொபைலை ஸ்கேன் செய்தால் நீங்கள் பதிவு செய்து தலைமை கழகத்தில் உறுப்பினராகலாம்.
இதனை ஒவ்வொரு கிளைக் கழக நிர்வாகிகள், நகர நிர்வாகிகள் பயன்படுத்தி அதிக உறுப்பினர்களை உருவாக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட பேரவை செயலாளர் செந்தில் குமார் , விவசாய பிரிவு துணைச் செயலாளர் செல்வம், ஒன்றிய செயலாளர்கள் போளூர் விமல் ராஜ், பெரணமல்லூர் மேற்கு வீரபத்திரன், சேத்துப்பட்டு ராகவன்,நகர பொருளாளர் இஸ்மாயில், அல்போன்ஸ்,சாம்சன், ராஜ்,நகர இளைஞர் இளம்பெண் பாசறை செயலாளர் செந்தில்குமார்,நகர துணை செயலாளர் யோகானந்தம்,மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து திருவண்ணாமலை மத்திய மாவட்டம், போளூர் சட்டமன்றத் தொகுதி பெரணமல்லூர் ஒன்றியத்தில், பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற துணை சபாநாயகர் திருவண்ணாமலை மத்திய மாவட்ட பொறுப்பாளர், வரகூர் அருணாச்சலம், திருவண்ணாமலை மத்திய மாவட்ட கழக செயலாளர், போளூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெயசுதா, ஆகியோர் புதிதாக அமைக்கப்பட்ட பூத் கழக நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்கள்.
நிகழ்வில் மாநில,மாவட்ட,ஒன்றிய, நகர, பேரூர், கழக நிர்வாகிகள், மாவட்ட பிற அணி செயலாளர்கள், கிளை மற்றும் வட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.