Close
ஏப்ரல் 19, 2025 7:04 காலை

அமைச்சர் பொன்முடி பதவி விலக கோரி விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

வனத்துறை அமைச்சர் பொன்முடி, சைவ சின்னமான திருநீறு மற்றும் வைணவ சின்னமான திருமணை குறித்து ஆபாசமான விமர்சனம் செய்ததாகக் குற்றம்சாட்டி, அவரது பதவி நீக்கத்தை வலியுறுத்தி விசுவ ஹிந்து பரிஷத் மற்றும் சங்க் பரிவார் அமைப்புகள் இணைந்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகிலுள்ள காவலான் கேட் பகுதியில் மாவட்ட தலைவர் சிவானந்தம் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்துமதத்தின் ஆன்மிக அடையாளங்களை இழிவுபடுத்தும் வகையில் அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார். இது ஏக்கத்துக்கும் கோபத்திற்கும் காரணமாக உள்ளது. அவர் தனது பதவியை உடனடியாக விலக வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்,

மேலும் கோடிக்கணக்கான இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் செயலில் ஈடுபட்ட அமைச்சர் பொன்முடி பதவி விலக வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்ட பஜ்ரதங்கள், வட தமிழகம் விஹெச்பி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top