Close
ஏப்ரல் 19, 2025 9:20 காலை

அண்ணாமலையார் தாமரைக்குளத்தில் பலிகை விடும் நிகழ்வு..!

சிறப்பு அலங்காரத்தில் அண்ணாமலையார்

உலகப் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பங்குனி உற்சவம் நிறைவையொட்டி தாமரைக் குளத்தில் பலிகை விடுதல் நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்றது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பங்குனி உத்தரத்தை ஒட்டி கடந்த 11 அன்று அண்ணாமலையார் திருக்கோவிலில் அண்ணாமலையார் உண்ணாமலை அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் விமர்சையாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து கடந்த மூன்று நாட்களாக அண்ணாமலையார் உண்ணாமலை அம்மனுக்கு இரண்டாம் பிரகாரத்தில் திருக்கல்யாண மண்டபத்தில் அண்ணாமலையார் உண்ணாமலை அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து அருள் பாலித்தார் .

அதனைத் தொடர்ந்து மாலை மாற்றும் உற்சவம் மற்றும் நலங்கு உற்சவம் விமர்சையாக நடைபெற்று நலங்கு உற்சவம் நிறைவடைந்ததையடுத்து திருவண்ணாமலை நகரில் மையப் பகுதியில் உள்ள தாமரை குளத்தில் பலிகை விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அண்ணாமலையார் உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று 16 கால் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

திருடல் வீதி காமராஜர் சிலை பழைய மருத்துவமனை வழியாக தாமரைக் குளத்தின் அருகே உள்ள ராஜா மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதனைத் தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்கதாமரைக் குளத்தில் மளிகை விடும் நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான  பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

அதனைத் தொடர்ந்து நேற்று புதன்கிழமை இரவு அண்ணாமலையார் உண்ணாமலை அம்மனுடன் திருக்கோயில் வந்தடைந்தார்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top