திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் அடுத்த நார்த்தாம்பூண்டியில் ரூ 40 லட்சத்தில் புதிய இரண்டு வகுப்பறை பள்ளி கட்டிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அதை சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பாரதி ராமஜெயம், தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் ராமஜெயம், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் அண்ணாமலை, முன்னாள் ஒன்றிய குழு தலைவர் தமயந்தி ஏழுமலை, ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் பொன்மணி, அனைவரையும் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சட்டப் பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, புதிய இரண்டு வகுப்பறை பள்ளி கட்டிடத்தை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து பேசியதாவது;
நான் பல்வேறு வளர்ச்சி பணிகளை தொடங்கி வைக்க இந்த பகுதிக்கு வந்தபோது என்னிடம் இந்தப் பள்ளி தலைமை ஆசிரியரும் ஆசிரியர்களும் என்னிடம் உங்களுக்கு புதிய வகுப்பறை கட்டிடம் வேண்டுமென்று என்னிடம் கோரிக்கை வைத்தனர். அவர்கள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் ஆதிதிராவிட தாட்கோ திட்டத்தின் கீழ் ரூ 40 லட்சத்தில் புதிய ஸ்மார்ட் இரண்டு வகுப்பறை பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்து அதன் அரசனையை வழங்கினார். அதன் பின்னர் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு இதன் பணிகள் அடிக்கல் நாட்டை துவங்கி வைக்கப்பட்டது. அதன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று இப்போது புதிய ஸ்மார்ட் இரண்டு வகுப்பறை பள்ளி கட்டிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அதை இப்போது குத்து வளக்கு ஏற்றி மாணவர்கள் சிறந்த முறையில் படிப்பதற்காக பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் மாணவர்கள் சிறந்த முறையில் படித்து பெரிய அளவில் சாதிக்க வேண்டும் இப்பொழுது அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தான் பெரிய அளவில் சாதித்து வருகிறார்கள். அதேபோல் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு எண்ணற்ற திட்டங்களும் சலுகைகளும் வழங்கப்பட்டு வருகிறது. அதில் சீருடை, பேக், ஷூ, நோட்டு புத்தகம், ஜாமென்ட்ரி பாக்ஸ் போன்ற படிப்புக்கு தேவையான உபகரண பொருட்களை தொடர்ந்து வழங்கி வருகிறது. அது மட்டும் இல்லாமல் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் தினந்தோறும் மதியத்தில் முட்டையுடன் கூடிய உணவு போன்ற சிறப்பு திட்டங்களை மாணவர்களுக்காக வழங்கி முதல்வர் வருகிறார். அதை நீங்கள் சிந்தித்துப் பார்த்து சிறந்த முறையில் படித்து பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என்று சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட பிரதிநிதி குமார் , ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் தணிகாசலம், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் வினோத்குமார், மற்றும் ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் , உள்ளாட்சி பிரதிநிதிகள் அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.