தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக வந்தவாசி பணிமனை – 1 சாா்பில் வந்தவாசி – எரமலூா் வழித்தடத்திலும், பணிமனை – 2 சாா்பில் வந்தவாசி – எரமலூா் – கொண்டையாங்குப்பம் வழித்தடத்திலும் பேருந்து சேவை தொடங்கப்பட்டது.
இதையொட்டி, எரமலூா் கிராமத்தில் நடைபெற்ற விழாவில் ஆரணி எம்.பி. தரணிவேந்தன், வந்தவாசி எம்எல்ஏ அம்பேத்குமாா் ஆகியோா் கொடியசைத்து புதிய பேருந்து சேவையை தொடங்கி வைத்தனா்.
நிகழ்ச்சியில் போக்குவரத்துக் கழக மண்டல மேலாளா் துரைராஜ், பணிமனை – 1 கிளை மேலாளா் கமலக்கண்ணன் மற்றும் திமுக நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
ரூ.1 கோடி மதிப்பீட்டில் ஶ்ரீவரதராஜ பெருமாள் கோவில் புனரமைப்பு
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே மேல்சீசமங்கலம் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த ஆலயமான ஶ்ரீ கல்யாண ராமன் பஜனை வரதராஜ பெருமாள் கோவில் புனரமைக்க கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும் கோரிக்கைய ஏற்று இந்து சமய அறநிலை துறை சார்பில் ரூபாய் 99 லட்சம் மதிப்பீட்டில் கல்யாண ராமன் பஜனை வரதராஜ பெருமாள் கோவில் புனரமைக்க பணியினை ஆரணி எம்.பி. தரணிவேந்தன், செய்யாறு எம்எல்ஏ ஜோதி ஆகியோர் பூமி பூஜையில் பங்கேற்று திருப்பணியை துவக்கி வைத்தனர்.
மேலும் கோவில் நிர்வாகம் சார்பில் ஆரணி எம்.பி தரணி வேந்தன், செய்யாறு எம்எல்ஏ ஜோதி ஆகியோருக்கு மலர் மாலை அணிவித்து ஶ்ரீ கல்யாண ராமன் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் செய்து வழிப்பட்டனர்.
இந்நிகழ்ச்சியில் திமுக மாவட்ட பொருளாளர் தட்சிணாமூர்த்தி, நகர மன்ற தலைவர் ஏ.சி. மணி,ஒன்றிய செயலாளர்கள், அறங்காவலர் குழு தலைவர் சந்தானம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள், இந்து அறநிலையத்துறை ஆய்வாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் .