இன்று டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனாரின் பன்னிரண்டாவது நினைவு தின விழா கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
பா. சிவந்தி ஆதித்தனார் இந்திய கைப்பந்து விளையாட்டு சங்கத் தலைவராகவும் இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவராகவும் பணியாற்றியவர். 2008ஆம் ஆண்டில் இவருக்கு பத்மஸ்ரீ விருது இலக்கியம்/கல்வி பிரிவில் வழங்கப்பட்டது
அவரது பன்னிரண்டாவது நினைவு தின விழாவின் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டம் தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பு சார்பில் சிவந்தி ஆதித்தனாரின் அலங்கரிக்கப்பட்ட உருவப்படத்திற்கு நிறுவனத் தலைவர் லூர்து நாடார் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து பல்வேறு ஆன்மீகப் பணிகள் மற்றும் கல்விப் பணிகளை மேற்கொண்ட சிவந்தி ஆதித்தனாரின் பெயரை தென்காசி புதிய பேருந்து நிலையத்திற்கு சூட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இந்நிகழ்ச்சியில் பல்வேறு சமயங்களை சார்ந்த பொதுமக்கள் மற்றும் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.