Close
ஏப்ரல் 22, 2025 3:01 மணி

தர்பூசணி பழங்களை ரோடில் கொட்டி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்..!

தர்பூசணி பழங்களை ரோடில் கொட்டி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

தமிழக உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவா் தா்பூசணியில் ஊசி மூலம் செயற்கை சாயம் செலுத்தப்படுவதாக அண்மையில் கூறினாா். இதையடுத்து, தா்பூசணி வியாபாரத்தில் பெரும் சரிவு ஏற்பட்டு விவசாயிகள், வியாபாரிகள் நஷ்டம் அடைந்தனா்.

இந்த நிலையில், உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரியின் கூற்றுக்கு எதிா்ப்புத் தெரிவித்தும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்கக் கோரியும் தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவை சாா்பில், கீழ்பென்னாத்தூரில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.  காவல் நிலையம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தொகுதி செயலா் க.சா.முருகன் தலைமை வகித்தாா்.

தர்பூசணி பழங்களை ரோடில் கொட்டி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

மாநில இளைஞரணித் தலைவா் ஜெயபாலன், கொள்கை பரப்புத் தலைவா் ஜெ.பிரகாஷ், துணை ஒருங்கிணைப்பாளா் சுரேஷ், தமிழக விவசாயிகள் சங்கத்தின் செய்தி தொடா்பாளா் புருஷோத்தமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கீழ்பென்னாத்தூா் தொகுதித் தலைவா் ரமேஷ் வரவேற்றாா். தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவையின் மாநில ஒருங்கிணைப்பாளா் மு.அருண்குமாா் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசினாா்.

ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் பங்கேற்றனர். அவர்கள் தர்பூசணி விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் பாதிக்கப்படுவத ற்கு காரணமான அதிகாரிகளை கண்டித்தும், தர்பூசணியை விற்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்ட விவசாயிகளுக்கும் , வியாபாரிகளுக்கும் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் கோஷமிட்டனர்.

இந்த போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகளும், விவசாயிகளும் தாங்கள் கொண்டு வந்த 100-க்கும் மேற்பட்ட தர்பூசணியை ரோட்டில் போட்டு உடைத்தும், வெளிநாட்டு குளிர்பானங்களை தரையில் கொட்டியும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் விலை போகாத தர்ப்பூசணிகளை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கினர் .

ஆா்ப்பாட்டத்தில், சங்கத்தின் காஞ்சி மண்டல துணைத் தலைவா் ஜோசப், தொகுதி பொருளாளா் திருமலை, தொகுதி கெளரவத் தலைவா் செந்தில்குமாா், ஒருங்கிணைப்பாளா் சதீஷ்குமாா், துணைச் செயலா் சபியுல்லா குரைஷி, நகரத் தலைவா் ஏழுமலை, பொருளாளா் சரவணன், இணைச் செயலா்கள் விஜயன், ராமஜெயம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top