Close
ஏப்ரல் 25, 2025 6:13 மணி

திமுக அமைப்பு சாரா ஓட்டுநர் பணி சார்பில் நீர் மோர் தண்ணீர் பந்தல் திறப்பு..!

நீர்மோர் பந்தல் திறப்பு

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக அமைப்பு சாரா ஓட்டுநர் பணி சார்பில் திருவண்ணாமலை மாநகரம் முழுவதும் பல்வேறு இடங்களில் கோடைகாலத்தில் மக்களின் தாகம் தீர்க்க நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது.

இவ்விழாவிற்கு மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாவட்ட அமைப்பாளர் AA.ஆறுமுகம் தலைமை தாங்கினார்.

இந்நிகழ்வில் மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று நீர்மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர், பழங்கள், ஜூஸ் உள்ளிட்டவற்றை வழங்கினார்.

தொடர்ந்து திருவண்ணாமலை தெற்கு மாவட்டம்,  திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதி சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர், கழக தலைவர் அவர்களின் 72-வது பிறந்தநாள் விழா முன்னிட்டு மாநகரம் பேகோபுரம் பகுதியில் நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

போளூர்

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், போளூர் சட்டமன்ற தொகுதி, போளூர் நகர திமுக சார்பில் கோடைகாலத்தில் மக்களின் தாகம் தீர்க்க போளூர் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளி முன்பு  நீர் மோர் பந்தலை  மாநில மருத்துவரணி  துணைத் தலைவரும், போளூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் எ.வ.வே.கம்பன், ஆரணி நாடளுமன்ற உறுப்பினர் MS. தரணிவேந்தன் ஆகியோர்.  கோடைகாலத்தில் மக்களின் தாகம் தீர்க்க நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார்கள்.

நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம், மாநகர செயலாளர் கார்த்திக் வேல்மாறன், மாவட்ட அமைப்பாளர் நேரு, மாமன்ற உறுப்பினர்கள் கருணாநிதி, சுப்ரமணியன், எடப்பாளையம் ரவி, ஜெயபிரகாஷ், முத்துக்குமார், கணேசன் மற்றும் போளூர் கழக நிர்வாகிகள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள், கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top