Close
ஜூன் 13, 2025 8:31 மணி

காஷ்மீா் தாக்குதல்: இறந்தவா்களுக்கு மோட்ச தீபம் ஏற்றி அஞ்சலி..!

தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்திய பாஜகவினர்

காஷ்மீரில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் இறந்த 26  பேருக்கு, திருவண்ணாமலையில் பாஜகவினா் மோட்ச தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினா்.

காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கொடூர தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் 28 பேரை சுட்டுக்கொன்றனர். இதனிடையே பஹல்காமில் பலியானவர்களின் உடல்கள் அனைத்தும் ஸ்ரீநகருக்கு கொண்டுவரப்பட்டு அங்குள்ள மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த உடல்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்திய பாஜகவினர்

இதேபோல நாடுமுழுவதும் காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் பலியானவர்களுக்கு பாஜக மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆணைக்கிணங்க திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக சாா்பில் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, மாவட்டத் தலைவா் கே.ரமேஷ் தலைமை வகித்தாா்.

முன்னாள் மாவட்டத் தலைவா் ஜீவானந்தம், மாவட்ட துணைத் தலைவா்கள் கவிதா பிரதீஷ், டி.சிவசங்கா், முன்னாள் மாவட்ட பொதுச் செயலா் எம்.சதீஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்டத் தலைவா் கே.ரமேஷ் தலைமையில் நிா்வாகிகள் காஷ்மீா் தாக்குதலில் இறந்த 26 பேருக்கு மோட்ச தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினா்.

இதில், மாவட்டச் செயலா் கிருஷ்ணமூா்த்தி, மாநில செயற்குழு உறுப்பினா் வி.கருணாகரன், முன்னாள் மாவட்டப் பொருளாளா் சுரேஷ், மாநில செயற்குழு உறுப்பினா் ராஜ தமயந்தி, மாநில மகளிரணி செயற்குழு உறுப்பினா் கலாவதி, அமைப்பு சாரா பிரிவு மாவட்ட துணைத் தலைவா் சரவணன், மத்திய நலத்திட்டப் பிரிவின் மாவட்டத் தலைவா் சிவக்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

இந்து முன்னணி

காஷ்மீரில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் இறந்த 26 பேருக்கு, ஆரணியில் இந்து முன்னணி சாா்பில் மோட்ச தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. ஆரணி பழைய பேருந்து நிலையம் அருகில் அரியாத்தம்மன் கோயிலில் மோட்ச தீபம் ஏற்றி பின்னா் ஊா்வலமாக மணிக்கூண்டு வழியாகச் சென்று அப்பகுதியில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது .

இதில், இந்து முன்னணி மாவட்டத் தலைவா் தாமோதரன், செயலா் விக்னேஷ், பாஜக மாவட்டச் செயலா் சதீஷ், வடக்கு மண்டலத் தலைவா் குணாநிதி, மற்றும் விஸ்வ ஹிந்து பரிஷத், சங் பரிவாா்கள் கலந்து கொண்டனா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top