காஞ்சிபுரத்தில் காஷ்மீர் சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டதை கண்டிக்கும் வகையில் பாஜகவினர் பேனரில் விரும்பத்தகாத வாசகங்கள் கொண்டுள்ளதால் காவல்துறை அதை பறிமுதல் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் அமைந்துள்ள பஹல்காமில் பைசரன் பள்ளத்தாக்கு உள்ளது. இந்த பகுதி மினி சுவிட்சர்லாந்து என அழைக்கப்படுகிறது,
இந்த பகுதியில் நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் இயற்கை அழகை ரசித்து கொண்டிருந்தனர்.
இங்கு நடந்தோ அல்லது குதிரையிலோ தான் செல்ல முடியும். இந்தநிலையில் அங்கு வந்த தீவிரவாதிகள் சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர், இதில் 29 நபர்கள் உயிரிழந்தனர்.
இந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நாடு முழுவதும் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.
அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்ட பாஜக சார்பில் , காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே மோட்ச தீபம் மற்றும் கண்ணீர் அஞ்சலி செலுத்தும் விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டு அதற்காக பேனர் வைக்கப்பட்டது.
அந்த பேனரில் அனுமதிக்க படாத வாசகங்கள் இருந்ததாக கூறி காவல்துறை அதனை சிவகாஞ்சி காவல்துறையினர் பறிமுதல் செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து மீண்டும் அந்த வாசகங்களை நீக்கி விட்டு புதிய பேனர் அமைத்து மோட்ச தீபம் ஏற்றியும், பூக்கள் தூவி மலர் அஞ்சலி செலுத்தினர். மேலும் தீவிரவாதத்தை ஒடுக்குவோம் வேர் அறுப்போம் என கோஷங்கள் எழுப்பினர்.
அதன் பின் அந்த பேனரையும் சிவகாஞ்சி காவல்துறையினர் பறிமுதல் செய்ததால் பெரும் பரபரப்பு அப்பகுதியில் ஏற்பட்டது.