இலங்கை புத்த பிக்குகளால் கொண்டுவரப்பட்ட பகவான் புத்தருடைய எலும்பு துகள் காஞ்சிபுரம் புத்த விஹாரில் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டது.
காஞ்சிபுரம் அடுத்த வையாவூர் சாலையில் புத்த விஹார் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு பெரிய அளவிலான புத்தர் சிலை மணிமேகலை மற்றும் போதிதர்மர் சிலைகளும் வைக்கப்பட்டு நாள்தோறும் பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இலங்கை சேர்ந்த வேன்.வால்போலாவேதா மற்றும் வேன்.ரத்தினாராசி புத்த பிக்குகள் இன்று இவ்வாலயத்திற்கு பகவான் புத்தருடைய எலும்பு துகள் எடுத்துக்கொண்டு வந்தனர்.
இவர்களை திருக்கோயில் நிர்வாகம் சார்பில் திருநாவுக்கரசு வரவேற்று ஆலயத்தில் எடுத்துச் சென்று சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டது.
சுமார் ஒரு மணி நேரம் இருவரும் பல்வேறு சிறப்பு பூஜைகள் மேற்கொள்ள அனைத்து பக்தர்களும் இதில் கலந்து கொண்டனர். இதில் கலந்துகொண்ட அனைவருக்கும் சிறப்பு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
பகவான் புத்தருடைய எலும்பு துகள் இவ்வாலயத்தில் வைத்து சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டது பக்தர்களிடையே மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
இந்நிகழ்வில் கௌதமன், வழக்கறிஞர் செந்தில்வேல், வரதராஜன் , குமார் செந்தில்குமார் கன்னிவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.