Close
ஏப்ரல் 29, 2025 7:23 மணி

காஞ்சி சங்கர மடத்தின் 71 வது பீடாதிபதி சந்நியாஸ்ய தீட்சை பெறும் நிகழ்விற்கான ஏற்பாடுகள் தீவிரம்

காஞ்சிபுரம் காமாட்சியம்மன் ஆலய திருக்குளத்தில் நாளை காலை நடைபெறவுள்ள காஞ்சி சங்கர மடத்தின் 71 வது பீடாதிபதி சந்நியாஸ்ய தீட்சை பெறும் நிகழ்விற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

புகழ்பெற்ற காஞ்சி சங்கர மாதத்தின் 71 வது பீடாதிபதியாக ஆந்திர மாநிலத்தை சேர்ந்த கணேசஷர்மா டிராவிட் என்ற நான்கு வேதம் கற்ற இளைஞர் தேர்வு செய்துள்ளதாக சங்கர மடம் சார்பில் அறிவிக்கப்பட்டது..

இதனைத் தொடர்ந்து இரு நாட்களுக்கு முன் காஞ்சிபுரம் சங்கர மடம் வருகை புரிந்த இளைய பீடாதிபதி சன்னியாச தீட்சை மற்றும் மடாதிபதி பதவியேற்பு பூஜைகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

அட்சய திருதி நாளான நாளை காலை 6 மணிக்கு காஞ்சி காமாட்சி அம்மன் ஆலய வளாகத்தில் உள்ள திருக்குளத்தில் சன்னியாசி தீட்சி பூஜை சங்கரமட பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தலைமையில் நடைபெறுகிறது.

இந்த பூஜை நிறைவுக்கு பின் காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்தில் உள்ள ஆதிசங்கரர் சன்னதியில் திருநாமம் சூட்டும் விழா நடைபெற உள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து திருக்கோயிலில் இருந்து ஊர்வலமாக ராஜவீதியில் அழைத்துச் செல்லப்பட்டு சங்கரமடம் செல்கிறார்.

அங்கு இளைய மடாதிபதி பதவி ஏற்பு நிகழ்வுகள் மற்றும் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிகழ்வில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், உயர்மன்ற நீதிபதிகள், பல்வேறு மடாதிபதிகள் , முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள் என பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்நிகழ்வை ஒட்டி திருக்கோயில் திருக்குளத்தில் விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top