Close
ஏப்ரல் 29, 2025 10:20 மணி

9- கோரிக்கைகளை நிறைவேற்றிய தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு அரசு மருந்தாளர் சங்கம் நன்றி அறிவிப்பு

தமிழ்நாடு அரசு மருந்தாளுனர் சங்க மாநில இணை செயலாளர் வே. பழனி வேலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக முதல்வர் வெளியிட்ட அறிவிப்பில்,

  • அரசு அலுவலர்கள் ஈட்டிய விடுப்பை சரண்டர் செய்து பலன் பெறும் நடைமுறை அக்டோபரிலேயே அமல்படுத்தப்படும்,
  • அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 2% உயர்த்தப்படும்,
  • அரசு ஊழியர்களுக்கான பண்டிகைக்கால முன்பணம் ரூ.10,000-இல் இருந்து ரூ.20,000 ஆக உயர்தப்படும்,
  • அரசு ஊழியர்களுக்கான திருமண முன்பணம் ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும்,
  • முதலமைச்சர்
  • ஓய்வூதியதாரர்களுக்கான பண்டிகைக்கால முன்பணம் ரூ.4,000இல் இருந்து ரூ.6,000ஆக உயர்த்தப்படும்,
  • பழைய ஓய்வூதியத்தை கொண்டு வருவது தொடர்பாக அறிவிக்கப்பட்ட கமிட்டி செப்டம்பர் 30க்குள் அறிக்கை,
  • அரசு ஊழியர்களின் பிள்ளைகள் தொழிற்கல்வி பயில ரூ.1 லட்சம், கலை அறிவியலுக்கு ரூ.50,000 முன்பணம்
  • சி மற்றும் டி பிரிவு ஓய்வூதியதாரர்களுக்கான பொங்கல் பண்டிகை பரிசுத்தொகை ரூ.1,000 ஆக உயர்வு
  • பதவி உயர்வு உள்ளிட்ட பலன்களை பெற மகப்பேறு விடுப்பு காலமும் இனி தகுதிக்கான காலமாக எடுத்துக் கொள்ளப்படும்,

என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்புக்கு தமிழ்நாடு அரசு மருந்தாளர் சங்கம் நன்றியை தெரிவித்துக் கொள்கிறது. அதே வேளையில் புதிய ஓய்வூதியம் திட்டத்தை ரத்து செய்து பழைய , ஓய்வூதியம் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top