Close
ஏப்ரல் 30, 2025 3:31 மணி

தொழிற்சங்க பிரதிநிதிகளின் ஆலோசனைக் கூட்டம்

தொழிலாளர்களுக்கு அரசு வழங்கும் சலுகை பட்டியலை வெளியிட்ட மாநகர செயலாளர்

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக அமைப்பு சாரா ஓட்டுனர் அணி சார்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தை மாநகர செயலாளர் கார்த்திவேல்மாறன் தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக அமைப்பு சாரா ஓட்டுனர் அணி சார்பில் திருவண்ணாமலை சட்டமன்ற உறுபினர் அலுவலக வளாகத்தில் தொழிற்சங்க பிரதிநிதிகளின் ஆலோசனை கூட்டம் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக அமைப்பு சாரா ஓட்டுனர் அணி மாவட்ட அமைப்பாளர் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாவட்ட அமைப்பாளர் டி.வி. எம்.நேரு மாவட்ட துணை அமைப்பாளர்கள் சுப்பிரமணி, அர்ஜுனன், பாலசுந்தரம், அன்பரசு, முருகையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவண்ணாமலை நடைபாதை சங்க நிர்வாகி புஷ்பா ராஜாமணி அனைவரையும் வரவேற்று பேசினார்.

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக அமைப்பு சாரா ஓட்டுநர் அணி சார்பில் மே தினத்தை முன்னிட்டு தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டத்தை மாநகர செயலாளர் கார்த்திவேல்மாறன் தொடங்கிவைத்து தொழிலாளர்களுக்கு அரசு வழங்கும் சலுகைபட்டியலை வெளியிட்டு பின் பேசுகையில்,

அமெரிக்காவிலுள்ள சிகாகோ நகரத்தில் 18 மணிநேரம் உழைக்க வேண்டும், 20 மணிநேரம் உழைக்க வேண்டும், நாள் முழுதும் உழைக்கவேண்டும். இடையில் கூழோ கஞ்சியோ ஊற்றுவார்கள். குடித்து விட்டு உடனே வேலை செய்ய வேண்டும். இப்படியாக தொழிலாளிகளை வாட்டி வதைத்தார்கள்.

அப்போதுதான் சிகாகோவில் மே 1ல் மிகப்பெரிய தொழிலாளர்கள் புரட்சி ஏற்பட்டது. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் செத்துமடிந்தார்கள். அதற்கு பிறகுதான் 8 மணிநேரம் வேலை என்ற பாதுகாப்பு கிடைத்தது அந்த மேதின பேரணிதான்.

ஆக நமது உரிமைகளை பெற்றுதந்த அந்த மேதின பேரணியில் நாம் அவசியம் கலந்து கொள்ளவேண்டும். கலைஞர் அரசுதான் தொழிலாளர்களுக்கு மே தினத்தில் விடுமுறை உடன் கூடிய ஊதியமும் கிடைத்தது என்றார்.

நிகழ்ச்சியில் ஆட்டோ ஓட்டுநர்களின் சங்க நிர்வாகிகள் அங்கப்பன், பிரபுதேவா, பிரகாஷ், உள்ளிட்ட ஆட்டோ ஒட்டுநர்கள்,தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். முடிவில் இருசக்கரவாகன பழுதுபார்ப்போர் சங்க நிர்வாகி ரவி நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top