Close
மே 3, 2025 1:21 காலை

அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை வசந்த உற்சவ துவக்கம்

பந்தகால் முகூர்த்தம்

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் சித்திரை வசந்த உற்சவம் மே மாதம்  10ஆம் தேதி வரை சிறப்பாக நடைபெற உள்ளது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தீபத் திருவிழா, மகா சிவராத்திரி விழா போன்று பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி சித்திரை மாதத்தில் இக்கோவிலில் சித்திரை வசந்த உற்சவ 10 நாட்கள் நடைபெறும்.

இந்த ஆண்டிற்கான சித்திரை வசந்த உற்சவ விழாவானது வியாழக்கிழமை தொடங்கி வருகிற 10-ந் தேதி (சனிக்கிழமை) வரை நடைபெற உள்ளது.

இந்த விழாவையொட்டி கோவிலில் 3-ம் பிரகாரத்தில் உள்ள சம்பந்த விநாயகர் சன்னதியில் பந்தக்கால் முகூர்த்தம் நிகழ்ச்சி நடைபெற்றது.

முன்னதாக சம்பந்த விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.

அதனைத் தொடர்ந்து சம்பந்த விநாயகர் ஆலயத்தில் பந்தக்காலுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து திருக்கோவிலில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட பந்தக்கால் சம்பந்த விநாயகர் ஆலயத்திற்கு அருகே ரோகிணி நட்சத்திரம் கன்னியா லக்னத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, திருக்கோவில் பிச்சகர் விஜயகுமார் மற்றும் ரகுராமன் முன்னிலையில் வெகு விமர்சையாக பந்தக்கால் முகூர்த்தம் விழா நடைபெற்றது.

இந்த நிகழ்வின் போது பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து  உச்சிக்கால அபிஷேகம், தொடா்ந்து தினமும் இரவில் மண்டகபடி நிகழ்ச்சிகளும் சாமிக்கு பூ கொட்டும் நிகழ்வுகளும் நடைபெறுகின்றன.

விழாவின் நிறைவாக மே 10-ஆம் தேதி காலை ஐயங்குளத்தில் தீா்த்தவாரியும், அன்றிரவு கோபால விநாயகா் கோயிலில் மண்பகபடியும் நடைபெறுகிறது.

இதைத் தொடா்ந்து, கோயில் கொடிமரம் முன் இரவு 11 மணிக்கு மேல் மன்மத தகனம் நடைபெற உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர், அலுவலர்கள் மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

விநாயகர் சன்னதி எதிரில் நடைபெற்ற சிறப்பு பூஜை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top