Close
மே 6, 2025 12:35 மணி

அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்த ராகவா லாரன்ஸ்

அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்த ராகவா லாரன்ஸ்

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலிலுக்கு  சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்,  தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்பட நடிகர், நடிகைகள், அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள் என அனைவரும் சமீப காலமாக அண்ணாமலையாரை தரிசனம் செய்ய வருகின்றனர்.

இந்நிலையில்  நடிகர் ராகவா லாரன்ஸ், அவரது மகன் மற்றும் தாயுடன் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் சிவாச்சாரியார்கள் பிரசாதங்களை வழங்கினார்.

அண்ணாமலையார் சன்னதி, சம்பந்த விநாயகர் சன்னதி, உண்ணாமுலை அம்மன் சன்னதி உள்ளிட்ட பல்வேறு பிரகாரங்களில் அவர் வழிபட்டார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து பிரசாதம் வழங்கப்பட்டது.

தொடர்ந்து ராகவா லாரன்ஸ் உடன் கோவில் ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள், பக்தர்கள், ரசிகர்கள் என பலர் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top