Close
மே 6, 2025 5:36 மணி

திருவண்ணாமலையில் விளையாட்டு அரங்கம், பயிற்சி மையம் : காணொளியில் தொடங்கி வைத்த துணை முதல்வர்..!

விளையாட்டு உபகரணங்களை வழங்கிய துணை சபாநாயகர்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில்  திருவண்ணாமலை மாவட்டத்தில் கீழ்பென்னாத்தூரை அடுத்த நாரியமங்கலம் ஊராட்சி, காக்காப்பட்டி, திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தொகுதிக்கு உள்பட்ட புதுப்பாளையம் ஒன்றியம் நாகப்பாடி அரசு பாலிடெக்னிக் வளாகத்தில் ரூ.3 கோடியில் சிறு விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கான பணிகளை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்தவாறு காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கிவைத்தாா்.

கீழ்பெண்ணாத்தூர்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் நடைபெற்ற இந்த விழாவில் சென்னையில் இருந்தபடியே தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பயிற்சி மையத்தைத் தொடங்கிவைத்தாா். மொத்தம் 6 ஏக்கா் பரப்பளவில் ரூ.3 கோடியில் அமையும் இந்த விளையாட்டு அரங்கில் பல்வேறு வசதிகள் உள்ளன.

அதனைத் தொடர்ந்து  மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் ஆகியோா் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கிப் பேசினா்.

நிகழ்ச்சியில், வருவாய்க் கோட்டாட்சியா் ராஜ்குமாா், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நல அலுவலா் (பொ) சண்முகப்பிரியா மற்றும் அரசுத் துறை அதிகாரிகள் பலா் கலந்து கொண்டனா்.

கலசப்பாக்கம்

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தொகுதிக்கு உள்பட்ட புதுப்பாளையம் ஒன்றியம் நாகப்பாடி அரசு பாலிடெக்னிக் வளாகத்தில் ரூ.3 கோடியில் சிறு விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கிவைக்கப்பட்டன.

விளையாட்டு உபகரணங்களை வழங்கிய துணை சபாநாயகர்

5 ஏக்கரில் அமையவுள்ள இந்த சிறு விளையாட்டு அரங்கத்துக்கான பணிகளை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்தவாறு காணொலிக் காட்சி வாயிலாக  தொடங்கிவைத்தாா்.

அதனைத் தொடர்ந்து , பாலிடெக்னிக் வளாகத்தில் சிறு விளையாட்டு அரங்கம் அமையவுள்ள இடத்தை கலசப்பாக்கம்  தொகுதி எம்எல்ஏ பெ.சு.திசரவணன் பாா்வையிட்டு பணியை தொடங்கிவைத்துப் பேசினாா்.

நிகழ்ச்சியில்     மாவட்ட விளையாட்டு அலுவலர் சண்முகபிரியா, வட்டார வளர்ச்சி அலுவலர் சம்பத், வட்டார வளர்ச்சி அலுவலர் நிர்மலா,  புதுப்பாளையம் முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் சுந்தரபாண்டியன், திமுக ஒன்றியச் செயலா் ஆறுமும், நாகப்பாடி முன்னாள் தலைவா் சுந்தரம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top