திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமி தினத்தன்று பல்வேறு மாநிலங்கள் மற்றும் பாவட்டங்களிலிருந்தும் பக்தர்கள் வருகைபுரிந்து கிரிவலம் சென்று வழிபடுகின்றனர். சித்திரை மாதத்தில் வருகின்ற பெளர்ணமி மிகவும் விசேஷமாக அமைந்த்திருப்பதால் அன்றைய தினம் பல இலட்சக்கணக்கான பக்தர்கள் வருகைபுரிந்து கிரிவலம் செல்கின்றனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் சித்திரை பௌா்ணமி விழா மே 11-ஆம் தேதி இரவு 8.53 மணிக்குத் தொடங்கி மே 12-ஆம் தேதி இரவு 10.48 மணிக்கு நிறைவடைகிறது.
இந்த வருடமும் பல்வேறு நாடுகள், மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பெருமளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையிலும், பக்தர்களின் வசதிக்காகவும் திருவண்ணாமலைக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரா் திருக்கோயிலில் நடைபெறும் சித்திரை பெளா்ணமி திருவிழாவில் அதிகளவில் பக்தா்கள் பங்கேற்பாா்கள் என்பதால் கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையிலும், பயணிகளின் வசதிக்காகவும் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் கிளாம்பாக்கத்திலிருந்து வரும் 11ம் தேதி 1,156 பேருந்துகளும் மற்றும் 12ம் தேதி 966 பேருந்துகளும் மாதவரத்திலிருந்து 11ம் தேதி 150 பேருந்துகளும் 12ம் தேதி 150 பேருந்துகளும் தினசரி இயக்கக் கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்படும் மற்றும் கோயம்பேட்டிலிருந்தும் இயக்கப்படும்.
மேலும், பல்வேறு இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு 11ம் தேதி 1,940 பேருந்துகளும் 12ம் தேதி 1,530 பேருந்துகளும் தினசரி இயக்கக் கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்படும்.
இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதனம் கொண்ட 40 பேருந்துகள் கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலைக்கு 11, 12ம் தேதி களில் இயக்கப்படும்.
இதுதவிர சென்னை, மதுரை, சேலம், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திருநெல்வேலி, நாகர்கோவில், தென்காசி, தூத்துக்குடி மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in < http://www.tnstc.in > மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம். இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.