திருவண்ணாமலை தியாகி நா.அண்ணாமலைபிள்ளை அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ்டூ தேர்வில் 100 சதவித தேர்ச்சி பெற வைத்த ஆசிரியர் ஆசிரியைகளை பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஏ.ஏ.ஆறுமுகம் பாராட்டி சால்வை அணிவித்து இனிப்புகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் வெங்கடேசன் அனைவரையும் வரவேற்று பேசினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஏ.ஏ.ஆறுமுகம் ஆசிரியர் ஆசிரியைகளை பாராட்டி சால்வை அணிவித்து இனிப்புகளை வழங்கிய பின் பேசுகையில்
மிக எளிமையான குடும்பத்திலிருந்து பிறந்து வளர்ந்து பல இன்னல்கள் நடுவில் படிப்பது என்பதே மிக கேள்விக்குறி. இதில் பல கிராமங்களிலிருந்து வருகை தந்து ஒழுக்கத்துடன் ஆசிரியர் ஆசிரியைகள் பேச்சைக் கேட்டு கல்வியில் இன்று ஒரு பெரும் சாதனையை படைத்துள்ளது நமது பள்ளி. திருவண்ணாமலையில் பல தனியார் பள்ளிகளுக்கிடையே போட்டி போட்டுக்கொண்டு அரசுப் பள்ளியில் 85 மாணவ மாணவிகள் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றிருப்பது மகிழ்ச்சி. அதில் முழுமையாக பிளஸ்டு தேர்வில் 100 சதவிதம் தேர்ச்சி பெற்றிருப்பது பாராட்டுக்குரியது எனக் கூறினார்.
தொடர்ந்து விழாவில் தியாகி அண்ணாமலைபிள்ளை அரசு மேல்நிலைப்பள்ளியில் முதல் மதிப்பெண் 482 பெற்ற சே.பிரதாப் 2ம் மதிப்பெண் 471 பெற்ற ஏ.ஜான் ஹென்றி 3ம் மதிப்பெண் 470 பெற்ற க.தன ஶ்ரீ, ஆகியோர்களை பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்த விழாவில் மாணவ மாணவியர்கள் அரசு பள்ளியில் வெற்றி பெற ஊக்கமளித்த பள்ளி தலைமையாசிரியர் பா.ஜெயக்குமாரி உதவி தலைமையாசிரியர் மு.சண்முகம் ஆசிரியர் ஆசிரியைகள் வ.சதீஷ்குமார், பா.கலைச்செல்வி நா.பாலசுப்பிரமணியன், ஆர். காவேரி, கா.முத்துகணேசன், இரா.செல்வி, கி.ச.ஷைலஜா, இரா.தாமோதரன், சி.யமுனா ஆகியோர்களை பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஏ.ஏ.ஆறுமுகம் பாராட்டி மகிழ்ந்தார். இறுதியில் உடற்கல்வி ஆசிரியர் நா.சுரேஷ்குமார் நன்றி கூறினார்.