Close
மே 12, 2025 6:45 காலை

அண்ணாமலையார் கோவிலில் உயர்மின் கோபுர விளக்குகளை தொடங்கி வைத்த துணை சபாநாயகர்..!

உயர்மின் கோபுர விளக்குகளை தொடங்கி வைத்த துணை சபாநாயகர்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ரூபாய் 36 லட்சம் மதிப்பீட்டில் உயர்மின் கோபுர விளக்குகளை சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கக்கூடிய  திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு  தினந்தோறும் ஆயிர க்கணக்கான பக்தர்களும் பௌர்ணமி உள்ளிட்ட நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் திருவண்ணாமலைக்கு வருகை தந்து அண்ணாமலையாரை வழிபட்டு 14 கிலோமீட்டர் கொண்ட கிரிவலப் பாதையில் கிரிவலம் வந்து வழிபாடு செய்கின்றனர்.

இந்நிலையில் கடந்த ஒரு வருடமாக  ஆந்திரா, தெலுங்கானா,கர்நாடகா போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் அதிக அளவில் பக்தர்கள் வருவதால் தமிழக  அரசு சார்பில் விரிவான ஏற்பாடுகளை செய்து வருகிறது.

உயர் மின் கோபுர விளக்குகள்

அந்த வகையில் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர்  மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 36 லட்சத்தில் இரு உயர் மின் கோபுர விளக்குகள் அமைக்கப்பட்டு பணிகள் நிறைவடைந்த நிலையில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி உயர் மின் கோபுர விளக்கை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார் .

இந்நிகழ்ச்சியில் மாநில தடகள சங்க துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன், நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் டிவிஎஸ் ராஜாராம், சினம் பெருமாள், கோயில் இலை ஆணையர் பரணிதரன், மா மன்ற துணைத் தலைவர் சு.ராஜாங்கம், குணசேகரன் வழக்கறிஞர் கண்ணதாசன்,உதவி ஆணையர் ராமசுப்பிரமணி ,கோயில் கண்காணிப்பாளர் கண்ணன், கோயில் மேலாளர் கருணாநிதி ,கோயில் மணியக்காரர் ராஜா, இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ரூ. 18 லட்சம் மதிப்பீட்டில் தலா 2 உயர்மின் கோபுர விளக்குகளில் 32 பல்புகள் அமைக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top