Close
மே 13, 2025 12:17 காலை

சமுதாய வளைகாப்பு விழா:எம்பி பங்கேற்பு..!

சீர்வரிசை பொருட்களை வழங்கிய எம்பி

ஆரணியில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்களை ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் தரணிவேந்தன் வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் புத்திரகா மேட்டிஷ்வரர் ஆலய திருமண மண்டபத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு  விழா நிகழ்ச்சி குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீணா தலைமையில் நடைபெற்றது.  இதில் சிறப்பு அழைப்பாளராக ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தரணிவேந்தன் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் எம்.பி.தரணிவேந்தன் பேசியாதாவது;

சீர்வரிசை பொருட்களை வழங்கிய எம்பி

ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதில்லை. தமிழ்நாட்டில் மட்டும் முதலமைச்சர் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்துகிறார் என்று நாம் பெருமைப்பட வேண்டும். கர்ப்ப காலங்களில் வளைகாப்பு நடத்துவதால் வளையல் ஓசைக்கு ஏற்ப குழந்தையின் அசைவை உணர முடியும் . கர்ப்பிணி பெண்கள் ஆன்மீக பாடல்கள் கேட்பது புத்தகங்களை படிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு தங்களை மகிழ்ச்சியான மன நிலையில் வைத்து கொள்ள வேண்டும். பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைக்குமாறு அறிவுறுத்தினார் .

இதனை தொடர்ந்து கர்ப்பிணி பெண்களுக்கு புடவை வளையல் மஞ்சள் குங்குமம் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.

பின்னர் கர்ப்பிணி பெண்களுக்கு 3 வகை சாதங்களுடன் அறுசுவை உணவு வழங்கபட்டன.

இந்நிகழ்ச்சியில் நகர மன்ற தலைவர் ஏ.சி. மணி, மாவட்ட துணை செயலாளர் ஜெயராணி ரவி, மாவட்ட பொருளாளர் தட்சிணாமூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், துரைமாமது மோகன், முன்னாள் துணை சேர்மன் ராஜேந்திரன், மாவட்ட சுற்று சூழல் அணி அமைப்பாளர் அமர் ஷெரிப், சிறுபான்மை பிரிவு அப்ஷல் பாஷா, வட்டார வளர்ச்சி அலுவலர் இராஜேஸ்வரி, வட்டார ஒருங்கிணைப்பாளர் சதிஷ், கர்ப்பிணி பெண்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக ஆரணி அருகே முள்ளிப்பட்டு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூபாய் 13.36 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட நியாய விலை கடை கட்டிடத்தை ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் தரணி வேந்தன் திறந்து வைத்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top