Close
மே 14, 2025 1:54 மணி

கலைஞரின் கனவு இல்லம் : ஆணைகளை வழங்கிய எம்எல்ஏ..!

கலைஞரின் கனவு இல்லம் ஆணைகளை வழங்கிய சரவணன்,எம்எல்ஏ

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட ஜவ்வாதுமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்  61 பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்லாத வீடு கட்டும் ஆணையை கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர்  சரவணன் , வழங்கினார்.

நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் ரேணுகோபால், முன்னிலை வகித்தார். முன்னாள் ஒன்றிய குழு துணை தலைவர் மகேஸ்வரி செல்வம், அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ.சு.தி.சரவணன் , கலைஞரின் கனவு எழுத்தில் வீடு கட்டும் ஆணையை வழங்கி பேசியதாவது,

கலைஞரின் கனவு இல்லம் ஆணைகளை வழங்கிய சரவணன்,எம்எல்ஏ

கலைஞரின் கனவு இல்லம் தமிழக மக்கள் முழுமையாக பயன்பெறும் வகையில் தமிழக முழுவதும் குடிசையே இல்லாத கிராமமாக மாற்றுவதற்காக கலைஞரின் கனவு இல்லத்தில் அனைவருக்கும் வீடு வழங்கப்பட்டு வருகிறது. இந்த கலைஞரின் கனவு இல்லத்தில் கட்டப்படும் வீடு அரசு மானியம் ரூ 3.50 லட்சம் மதிப்பீட்டில் அரசு ஒவ்வொரு பயனாளிக்கும் வழங்கப்படுகிறது. இது மலைவாழ் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக இப்போது 61 பயனாளிகளுக்கு வீடு கட்டும் ஆணையை வழங்கப்படுகிறது. இதன் மூலம் மக்கள் நீங்கள் சிறப்பான வீடு கட்டி அதன் மூலம் பயன்பெறுங்கள்.

கலைஞர் நினைத்தது போல் தமிழகத்தில் குடிசையே இல்லா மாநிலமாக மாற்றுவதற்கு இந்த கலைஞரின் கனவு இல்லம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த வீடு கட்டும் ஆணையை பெற்று உடனே பணிகளை துவங்கவேண்டும், துவங்கி மூன்று மாதத்திற்குள் பணிகளை முடித்து அதன் அரசு மானியத்தை பெற்று பயன்பெறுங்கள்.

இந்த கலைஞரின் கனவு இல்லத்தில் வழங்கப்படும் வீடு ஆணை வழங்குவதாக உங்களிடம் கூறி யாராவது பணம் கேட்டால் என்னிடம் தாராளமாக கூறுங்கள் அவர்கள் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சரவணன் எம்எல்ஏ  கூறினார்.

நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அரசு துறை சார்ந்த அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் ,பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top