Close
மே 19, 2025 4:07 மணி

வருவாய்த்துறை சங்கங்களின் சார்பாக 25ம் தேதி போராட்டம்

திருவண்ணாமலை தாலுக்கா அலுவலக வளாகத்தில் உள்ள சங்கக் கட்டடத்தில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பின், உயர்மட்டக்குழு கூட்டம், மாநில ஒருங்கிணைப்பாளர்கள் முருகையன், குமார், பூபதி, ராஜா, ரவி தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் உறுப்பு சங்கங்களின் மாநிலத் தலைவர், பொதுச்செயலாளர் மற்றும் மாநில பொருளாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில்,மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் ஆகியோரின் விரிவான ஆலோசனைகளுக்கு பின்னர் இயக்க நடவடிக்கைகள் மேற்கொள்வதென ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.

ஜூன் 25-ஆம் தேதி அனைத்து நிலைகளைச் சோ்ந்த 40 ஆயிரம் வருவாய்த்துறை அலுவலா்கள் கலந்து கொள்ளும் ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு, மாவட்டத் தலைநகரில் பேரணி, தா்னா நடத்துவது. 38 மாவட்டங்களில் உள்ள 317 வட்டக் கிளைகளில் மாநில ஒருங்கிணைப்பாளா்கள், உயா்மட்டக் குழு உறுப்பினா்களின் எழுச்சியான பிரசாரத்தை நடத்துவது.

அரசு அலுவலா்களை பாதுகாக்கும் வகையில் சிறப்புப் பணி பாதுகாப்புச் சட்டத்தை உடனே இயற்ற வேண்டும். அனைத்து நிலைகளில் பணிபுரியும் வருவாய்த்துறை அலுவலா்களுக்கு அவா்களின் பணித்தன்மை, பணிப்பளு ஆகியவற்றுக்கேற்ப மேம்படுத்தப்பட்ட ஊதியம், தனி ஊதியம் வழங்க வேண்டும்.

வருவாய்த்துறையில் உள்ள அனைத்து நிலை காலிப்பணியிடங்களையும் உடனே நிரப்ப வேண்டும், வரும் ஜூலை 1ம் தேதியை வருவாய்த்துறை தினமாக அனுசரித்து அரசாணை வெளியிட வேண்டும், அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களின் நிர்வாகிகளை தமிழ்நாடு முதலமைச்சர் அழைத்து பேசி தீர்வு காண வேண்டும், அனைத்து நிலை அலுவலர்களின் நலன் காத்திட தொடர்ந்து ஒற்றுமையோடு பயணிப்போம் ஒன்றுபடு வோம் , போராடுவோம், வெற்றி பெறுவோம் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பின் நிா்வாகிகள் ராஜா, ரவி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top