Close
மே 22, 2025 3:54 மணி

திருவண்ணாமலையில் தோழி தங்கும் விடுதிகள் திறப்பு..!

குத்து விளக்கேற்றி பயன்பாட்டுக்கு தொடங்கிவைத்த சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி

திருவண்ணாமலையில்  ரூபாய் 10.15 கோடியில் கட்டப்பட்ட தோழி விடுதிகளை தமிழக முதல்வர் திறந்து வைத்தார்.

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள சிம்ம தீர்த்தம் எதிரே பணிபுரியும் மகளிர்களுக்காக 3 தலங்கள், 132 படுக்கை வசதிகள் கொண்ட தோழி தங்கும் விடுதிகள் கட்டப்பட்டது.

இதன் திறப்பு விழா, சென்னை, தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தாா்.

அதேவேளையில், தோழி விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி கலந்து கொண்டு தோழி விடுதியை குத்து விளக்கேற்றி பயன்பாட்டுக்கு தொடங்கிவைத்தாா்.

குத்து விளக்கேற்றி பயன்பாட்டுக்கு தொடங்கிவைத்த சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி

அப்போது அவா் பேசுகையில்,

பணி நிமித்தமாக தங்கள் சொந்த ஊர்களை விட்டு பிறநகரங்களுக்கு இடம் பெயரும் பணிபுரியும் பெண்களின் தேவைகளை உணர்ந்து தரமான பாதுகாப்பான மற்றும் குறைந்த கட்டணத்தில் பெண்களுக்கான தங்கும் விடுதிகளானதோழி விடுதிகள் தமிழ்நாடு அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு ஒர்க்கிங் விமன்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆனது தமிழ்நாடு அரசால் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களிலிருந்து வேலைக்காகவு ம் , பயிற்சி க்காகவும் உத்தியோக பூர்வ வருகைக்காகவும் செல்லும் பணிபுரியும் பெண்களின் தங்குமிடத் தேவைகளை நிவிர்த்தி செய்வதற்கான ஒரு சிறப்பு முயற்சியாக நிறுவப்பட்டது.

திருவண்ணாமலை மாநகராட்சி , கிரிவலப்பாதையில் உள்ள சிம்ம தீர்த்தம் அருகில் கட்டப்பட்டுள்ள புதிய தோழி விடுதி  3 தளங்கள் கொண்ட இந்த விடுதியில் 132 படுக்கை வசதி உள்ளது. இந்த விடுதியில் பயோ மெட்ரிக் முறையில் உள் நுழைவு வசதி, வை-பை இணையதள வசதி, கண்காணிப்பு கேமரா வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீா், ஆரோக்கியமான உணவு, தொலைக்காட்சி வசதி, சுடுநீா் வசதி, சலவை இயந்திரம், இஸ்திரி வசதி, வாகன நிறுத்துமிடம் போன்ற வசதிகள் உள்ளன.

இந்த விடுதியில் 15 நாள்கள் வரை குறுகிய காலமாகவும் தங்கிக் கொள்ளலாம். விடுதிக் கட்டணமாக ஒரு நாள் வாடகையாக ரூ.800, மாதக் கட்டணமாக ரூ.3,800 நிா்ணயிக்கப்பட்டு உள்ளது. விடுதியில் தங்க இணைய தளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

கூடுதல் விவரங்களுக்கு 9499988009 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ்,சி.என்.அண்ணாதுரை எம்.பி., மகளிா் திட்ட இயக்குநா் சரண்யா தேவி, மாவட்ட சமூக நல அலுவலா் கோமதி மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top