Close
மே 24, 2025 4:09 மணி

ஆன்லைன் மோசடியில் இழந்த பணம் மீட்பு: இணையத்தை பாதுகாப்பாக பயன்படுத்த எஸ் பி அறிவுரை

உரியவர்களிடம் பணத்தை ஒப்படைத்த மாவட்ட எஸ்பி

திருவண்ணாமலை மாவட்டத்தில் இணைய வழி மோசடியில் இழந்த ரூபாய் 5 லட்சம் மீட்கப்பட்டு உரியவரிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் ஒப்படைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு இணையவழி மோசடியில் சிக்கி பணத்தை இழந்த பொதுமக்கள், தாங்கள் இழந்த பணத்தை மீட்டுத்தருமாறு காவல் துறையில் புகாரளித்தனா்.

இணையவழி குற்றப்பிரிவின் இணையதளம் மற்றும் 1930 என்ற இலவச தொலைபேசி எண்ணில் அளித்த புகாா்கள் மீது விரைவான நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு மாவட்ட எஸ்.பி. சுதாகா் உத்தரவிட்டாா்.

இதையடுத்து, மாவட்ட இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் .பழனி தலைமையில், காவல் ஆய்வாளா் கவிதா மற்றும் போலீஸாா் தீவிர விசாரணை செய்து துரிதமாக செயல்பட்டு வங்கிகளின் உதவியுடன் பொதுமக்கள் இழந்த ரூ.5 லட்சத்தை மீட்டனா்.

இந்த நிலையில், மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில்  நடைபெற்ற நிகழ்ச்சியில், இணையவழியில் பணத்தை இழந்த நபா்களிடம் மீட்கப்பட்ட ரூ.5 லட்சத்தை மாவட்ட எஸ்.பி. சுதாகா் ஒப்படைத்தாா்.

அப்போது காவல் கண்காணிப்பாளர் தெரிவிக்கையில்;

தேவையற்ற லிங்குகளைதொடவேண்டாம். வாட்ஸ்அப், டெலிகிராம் மூலம் வரும் போலியான வங்கி செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம். ஓடிபி ஐ யாரிடமும் பகிரவேண்டாம் மற்றும் சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பகிர வேண்டாம்

சமீப காலமாக நடைபெற்று வரும் ஆன்லைன் வேலை மோசடிகள், ஆன்லைன் கடன் செயலி மோசடிகள், ஆன்லைன் முதலீட்டு மோசடிகள்,  செயற்கை நுண்ணறிவினை பயன்படுத்தி நடைபெற்று வரும் குற்றங்கள், அதனை தவிற்கும் வழிமுறைகளையும், பாதுகாப்பாக இணையத்தை பயன்படுத்துமாறும் அறிவுரைகள் வழங்கினார்.

மேலும் சைபர் குற்றங்களை www.cybercrime.gov.in என்ற இணையதளத்திலும் சைபர் குற்றங்கள் வழியாக பண இழப்பு ஏற்ப்பட்டால் இலவச தொலைபேசி எண் 1930 ல் பொது மக்கள் புகார் செய்ய வேண்டும் என கூறினர்.

நிகழ்வில் மாவட்ட இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவின் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பழனி, காவல் ஆய்வாளா் கவிதா மற்றும் போலீஸாா்,பொது மக்கள்  கலந்துகொண்டனா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top