Close
மே 25, 2025 3:32 காலை

தங்கையிடம் தவறாக நடக்க முயன்றவரை கத்தியால் குத்திய 16 வயது அண்ணன் கைது..!

Namakkal

கோப்பு படம்

நாமக்கல்:

தங்கையிடம் தவறாக நடந்து கொண்டவரை, கத்தியால் குத்திய 16வயது சிறுவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம், என்.புதுப்பட்டி அடுத்த வீரியம்பாளையம் காலனியை சேர்ந்தவர் ஜெகநாதன் (45). அவருக்கு சுஜாதா என்ற மனைவியும், ஒரு மகன், மகள் உள்ளனர். கணவன், மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், நான்கு ஆண்டுகளுக்கு முன், சுஜாதா, கடகால்புதூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

ஜெகநாதன், தனது தாயாருடன் வசித்து வருகிறார். அவர், வீரியம்பாளையம் பஞ்சாயத்தில், டேங்க் ஆப்பரேட்டராக பணியாற்றி வருகிறார். ஜெகநாதன், அடிக்கடி குடித்துவிட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் ஜெகநாதன், அப்பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவரை கையைப் பிடித்து இழுத்ததாக தெரிகிறது.

இது குறித்து, அந்த சிறுமி, தனது, 16 வயது அண்ணனிடம் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் இரவு, 8 மணிக்கு, அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையம் அருகில் ஜெகநாதன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த, 16 வயது சிறுவன், என் தங்கையிடம் ஏன் தவறாக நடந்து கொண்டாய் என கேட்டு, தன்னிடம் வைத்திருந்த கத்தியால், சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவானார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தவரை, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இச்சம்பவம் குறித்து, நாமக்கல் போலீசார் வழக்குப் பதிவு செய்து, 16 வயது சிறுவனை கைது செய்து, அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top