பழைய குற்றாலத்தில் முன்னாள் முதல்வர் காமராஜர் திறந்து வைத்த கல்வெட்டை வனத்துறையினர் அளித்ததாக சமூக வலைதளங்களில் வைரலான பதிவை தொடர்ந்து உடனே ஆய்வு மேற்கொண்ட சட்டமன்ற உறுப்பினர்.
தென்காசி மாவட்டத்தில் தென்காசியில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்களான குற்றால அருவிகள் அமைந்துள்ளது. இதில் பழைய குற்றால அருவியை முன்னாள் தமிழக முதல்வர் காமராஜர் திறந்து வைத்தார். அதற்கான கல்வெட்டும் அங்கு உள்ளது.
இந்நிலையில் பழைய குற்றால அருவியில் கடந்த ஆண்டு வெள்ளத்தில் சிக்கி சிறுவன் ஒருவன் உயிரிழந்ததை தொடர்ந்து அருவி முழுமையாக வனத்துறை கட்டுப்பாட்டில் வந்தது. இதனால் பழைய குற்றால அருவிகளில் குளிக்க வனத்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது.
இந்நிலையில் இன்று காலை முன்னாள் தமிழக முதல்வர் காமராஜர் திறந்து வைத்த கல்வெட்டை வனத்துறையினர் வர்ணம் பூசி அழித்ததாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதனை அறிந்த தென்காசி சட்டமன்ற உறுப்பினரும்,காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவருமான பழனி நாடார் பழைய குற்றாலத்திற்கு சென்று உடனடியாக ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அந்தப் பகுதியில் காமராஜர் திறந்து வைத்த கல்வெட்டு எவ்வித வர்ணம் பூசாமலும், சேதப்படுத்தப்படாமலும். ஆனால் பொதுப்பணித்துறை அருவி என்று எழுதப்பட்டிருந்த அனைத்து பகுதிகளிலும் வர்ணம் பூசி இருந்தது.
அதனைத் தொடர்ந்து அங்கிருந்து சட்டமன்ற உறுப்பினர் கிளம்பிச் சென்றார். இந்நிகழ்வில் மாவட்ட ஊராட்சி பஞ்சாயத்து துணைத்தலைவர் உதய கிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்